ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை உண்டுபண்ணுவதற்கு என்ன தேவைப்படுகின்றதாயுள்ளது-? WHAT DOES IT TAKE TO MAKE A CHRISTIAN LIFE-? 57-01-13 சிக்காகோ, IL USA 1. சகோதரன் ஜோசப், உங்களுக்கு நன்றி. இக்காலை இங்கே இருப்பது அருமையான ஒன்றாகும். ஐக்கியம் என்பதை விளக்குவதானது கடினமான ஒன்றாகும், அப்படித்தானே-? எனக்கு வயதாகிக் கொண்டிருக்கின்றது என்று நான் - நான் என் மனைவி இடமாகக் கூறினேன். நான் ...முன்னொரு நாளிலே ஜோசப் என்னை தொலைபேசியில் அழைத்தார், அப்போது நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நான், "இதோ, ஜோசப், ஞாயிறு காலை நான் நகரத்திற்கு அருகாமையிலே வெளியே இருக்கின்றேன், நான் வந்து உங்களை சந்திப்பேன்" என்றேன். 2. அவர், "ஓ, இதைக்காட்டிலும் வேறே எதுவும் எங்களை மேலான முறையில் திருப்திபடுத்தாது'' என்றார். நான் காரி என்ற இடத்தில் இருந்தேன் என்று நினைத்தேன், மேலும் நான் தெற்கு பெண்டிலிருந்து 125 மைல்கள் அப்பால் இருந்தேன். கடந்த இரவு அங்கே ஒரு சபையின் பிரதிஷ்டை கூட்டத்திற்கு பிறகு இக்காலை பார்வைக்கு ஒன்றுமே காண முடியாமல் போகச் செய்த ஒரு பனிப் புயலினூடாக நான் கார் ஓட்டி வந்தேன். என்னுடைய அருமையான நண்பர், கனடாவைச் சேர்ந்த திரு. டாம் என்னுடன் இருந்தார். ஆகவே நாங்கள் இக்காலையில் சாலைகளில் வளைந்து வளைந்து வந்து கொண்டிருந்தோம்... மிக அருமையான நண்பராகிய சகோதரன் ஜோசப்பிற்கு எங்கள் வாக்கை காக்கும்படிக்காக இங்கே இந்த பார்வைக்கு ஒன்றுமே தென்படாமல் செய்திருந்த அந்த பனிப்புயலிலே பிரயாணித்து வந்தோம். 3. ஸ்வீடன் நாட்டு மக்களாகிய இவர்கள், எனக்கு தெரியவில்லை... முன்னொரு நாளிலே இங்கிருக்கும் என் ஆப்த நண்பர்களான ஜீன் மற்றும் லீயோ என்னிடம் கூறாதிருந்தால் எனக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஃபெப்ருவரி மாதம் 10 தேதி முதல் 17 வரை நான் மின்னிய போலீஸில் இருந்திருக்க வேண்டும். அதைக்குறித்து ஒரு வார்த்தையைக் கூட நான் கேள்விப்படவில்லை. ஆகவே நான் சென்று கொண்டிருந்தேன்... சகோதரன் ஜாக்கின் விதவையான மனைவியாகிய சகோதரி கோ (Coe) அவர்களுடன் இருக்கும்படியாக அந்த கூட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவர்கள்... அவர் கர்த்தருடன் இருக்கும் படியாக கடந்து சென்று விட்டார், ஆகவே சகோதரி கோ நான் வரவேண்டுமென்று மிகவுமாக விரும்பினார்கள், அப்போது நான், “இப்பொழுது, சகோதரி கோ, இன்னும் சில நாட்களில் நான் திட்டம் என்னவென்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். அதைக்குறித்து நான் ஜெபித்துக் கொண்டிருப்பேன்” என்றேன். ஆகவே நாடு முழுவதுமாக ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்காக நான் வானொலி நிலையத்தில் இருந்த போது, 10 தேதியிலிருந்து 17 தேதி வரைக்குமாக நான் அங்கே இருக்க வேண்டும் என்று இந்த நபர்களிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. அதைக்குறித்து இன்னுமாக நான் கேள்விப்படாமலிருந்தேன், பாருங்கள்-? ஆகவே நான் அங்கே சென்றாகத் தான் வேண்டும். ஏனென்றால் நான்..... என்னால் அங்கே வர முடியாது என்று சகோதரி கோவிடமாக இப்பொழுது தான் நான் சொல்ல வேண்டியதாக இருந்தது. 4. ஸ்வீடன் நாட்டு மக்களாகிய இவர்கள்... கார்டன் பீட்டர்சன். நான் அதைச் செய்தாக வேண்டும் என்று நான் யூகிக்கின்றேன். ஏனென்றால் நான் - நான்... சில மக்கள் அவ்விதம் செய்தனர், இந்தசமயம் அவர் அவ்விதம் செய்யவில்லை. அவர் மாத்திரம், அவர் கொண்டு இருப்பது... கார்டிக்கு அது தெரியும். ஆகவே அவர்கள்... குறிப்பிட்ட இடங்களில் நான் இருப்பேன் என்று அவர்கள் விளம்பரப்படுத்துவார்கள், ஆனால் நானோ அதைக் குறித்து அறியாமல் இருப்பேன். மேலும் இப்பொழுது இன்னுமாக மற்றைய கூட்டங்கள் எனக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். மக்களுக்கு என்னுடைய வாக்கை நான் காத்துக் கொள்ள வேண்டும். அப்படியாகத்தான் அது நடந்தது. ஆகவே யாராவது ஒருவர் “சகோதரன் பிரன்ஹாம் தான் கொடுத்த வாக்கைக் காத்துக்கொள்வதில்லை” என்று கூறுவார்களானால், நீங்கள் சற்று நினைவில் கொள்ளவேண்டும், இந்த விதமான எதிர்பாரா பிழைகள் தான் அதை ஏற்படுத்தி விடுகின்றன. 5. எந்த ஒரு பெரிய கூட்ட அமைப்புகளோ, வானொலி நிகழ்ச்சியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியோ அவைகளைப் போன்றவைகளோ என்னிடமாக இல்லை. அவைகளை நான் கொண்டு இருப்பேன் என்றால் என்னால் சிறு சபைகளுக்கு செல்ல முடியாது. ஒரு சிறிய சபைக்கு ஒரல் ராபர்ட்ஸால் வரக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? நிச்சயமாக முடியாது. 6. முன்னொரு நாளிலே மேற்கு வர்ஜீனியாவிலுள்ள பார்க்கர்-ஸ்பர்கில் நான் இருந்தேன், அப்பொழுது “இதோ இங்கே நாம் சிறு மக்கள் கூட்டமாக இருக்கின்றோம், இங்கே லிட்டில் டெம்பிளில் 1500-பேர் இருக்கின்றோம்" என்று ஒரு மனிதன் கூறினதை நான் கேட்டேன். மேலும் அவர், "இங்கு வரமுடியுமா என்று ஒரு குறிப்பிட்ட ஊழியக்காரரை நாங்கள் கேட்டோம், அவர் இது மிகச்சிறு கூட்டம்' என்னால் வரமுடியாது என்றார், இன்னொருவரை வரமுடியுமா” என்று கேட்டோம், அவரும் 'மிகச் சிறிய கூட்டம், என்னால் வரமுடியாது' என்று கூறினார். இன்றைக்கு ஊழியக்களத்தில் இருக்கும் ஊழியக்காரர்களில் 3 அல்லது 4 பேரிடமாகக் கேட்டோம், அவர்களும், நீங்கள் மிகச்சிறிய கூட்டமாயிருக்கிறீர்கள். எங்களால் வர இயலாது' என்றனர்.'' பிறகு அவர் “சகோ.பிரன்ஹாம் வாருங்கள்" என்றார். அதற்காக எனக்கு ஒரு பெரிய பாராட்டுதலை அவர் அளிப்பதாக இருந்தது. 7. அப்பொழுது நான் பிரசங்க மேடையின் மேல் ஏறினேன். நான், “இப்பொழுது சற்று கேளுங்கள். அங்கே பின்னால் இருக்கின்ற மேயப்பர் அவ்விதமாக கூறினதை நான் கேட்டேன். அந்த மனிதர்களால் வரக்கூடுமானால் அவர்கள் வருவார்கள், ஆனால் நீங்கள் பாருங்கள், அவர்கள் அந்த விதமான கடமைப்பிணைப்புகளுக்கு ஆளாகி விடுகிறார்கள், வருவாய்ச் சார்ந்த காரணங்களால் அவர்கள் அதைச் செய்ய முடியவில்லை என்று கூறினேன். 8. ஓரல் ராபர்ட்ஸுக்கு ஒரு நாளுக்கு எத்தனை டாலர்கள் கொண்டிருக்க வேண்டியவராக இருக்கின்றார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்-? ஒரு நாளில் ஆறு அல்லது ஏழாயிரம் டாலர் அவருக்கு அளிக்கப்படவிருக்கையில், எப்படியாக அவரால் 4 அல்லது 5 நாட்கள் தங்க நேர்ந்து பிறகு அன்பின் காணிக்கையாக முன்னூறு டாலர் மாத்திரமே அளிக்கும் ஒரு சபைக்கு செல்ல முடியும்-? அவரால் அதைச் செய்ய முடியாது. அவர் செல்லக்கூடாது என்று விரும்புகின்றார் என்றல்ல, ஆனால் அவரால் அதை செய்ய முடியாது. 9. ஆனால் உங்களுக்குத் தெரியுமா, என்னைப் பொறுத்த வரையில், ஆம், எனக்கு - எனக்கு அப்படிப்பட்டதான ஒன்று கிடையாது. எனக்கு - எனக்கு ஒன்றுமே தேவையில்லை, எனக்குத் தேவையானதை, நான் கொண்டிருக்க வேண்டிய எந்த சிறு காரியமானாலும் அதைக் கர்த்தர் அளிக்கின்றார். ஆகவே நான் - நான் எந்த ஒன்றைச் செய்தாக வேண்டும் என்கின்ற கடமைப் பிணைப்பில் இல்லை. எப்படி வேண்டுமானாலும் என்னால் செல்ல முடியும். இங்கே 10 பேர் மாத்திரமே இருக்கின்ற ஒரு சபை கூட்டத்திற்கு நான் போக வேண்டும் என்று அவர் விரும்புவாராளால் அதை நான் ஏற்றுக்கொள்வேன், நான் ஒரு வாரம், 10 நாள் தங்க வேண்டும் என்று அவர் விரும்புவாரானால் என்னால் தங்க முடியும். நான் ஆப்பிரிக்காவிற்குச் சென்று 3 அல்லது 4 இலட்சம் பேர்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்று அவர் விரும்புவாரானால், ஆம், அதற்கான செலவிற்கு அவர் - அவர் பணத்தை வைத்திருக்கின்றார். ஆகவே அவர் என்னை அனுப்ப மாத்திரம் செய்கின்றார். நான் எந்த ஒரு கடமைப்பிணைப்பிலும் இல்லை, நான் போக வேண்டும் என்று அவர் விரும்புவாரானால், அதற்கான தேவைகளை அவர் எப்பொழுதுமே பார்த்துக் கொள்வார். ஆகவே அந்த விதமாகத்தான் வாழ விரும்புகிறேன், சுதந்தரமாக இருக்கவே விரும்புகிறேன். 10. நாளை இரவு நான் ஒரு கூடாரத்திற்கு செல்கின்றேன்... நாளை இரவு ஒரு கூடாரத்திற்கு நான் செல்கிறேன், இரண்டு நாள் கூட்டங்களுக்கு மக்கள் முழுவதுமாக நிரம்பி 60 பேர்கள் உட்காரும்படியான ஒரு கூடாரமாகும். அது சரி, மிச்சிகனில் உள்ள ஸ்டர்கிஸ் என்ற இடமாகும். அக்கூடாரம் முழுவதுமாக நிரம்புமானால் அதின் கொள்ளளவு 60 பேர் மாத்திரமே. ஆம், இந்தியாவிலுள்ள பம்பாயில் (மும்பாய் - தமிழாக்கியோன்) 5 இலட்சம் பேர்களுக்கு பிரசங்கிக்கச் சென்றது போலவே ஸ்டர்கிஸுக்கும் அதே விதமான மகிழ்ச்சியுடனே செல்கின்றேன். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புவதன் பேரிலே தான் காரியமானது உள்ளது. பாருங்கள்-? இப்பொழுது, அதை நான் விரும்புகிறேன். எனக்காக ஜெபம் செய்யுங்கள். 11. இப்பொழுது இங்கே பனிப்புயலானது அடித்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே நான் திரும்பி காரோட்டிச் செல்ல பனிப்புயலான சாலை தான் உள்ளது. இன்று மதியம் நான் அங்கே செல்ல வேண்டும். ஆனால் எப்படியோ என் மனைவி இக்காலை எழுந்து கொண்டாள்; விசுவாசத்தில் சிறிது ஒரு வித குறைந்த நிலையில் இருந்தாள். அவள், "நீங்கள் மாத்திரம் ஜோசப்பை அழைத்து, நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்று கூறுவீர்களானால் ....." என்றாள். 12. நான், “ஆனால் நான் அவ்விதமாக வாக்குக் கொடுக்கவில்லை” என்றேன். அவள், "பில்லி, அங்கே சிக்காகோவில் எப்படியாக .... அங்கே வானிலையானது பூஜ்ஜியத்திற்கு மேலே மூன்று டிகிரியாக இருக்கின்றதே. அவ்வித நிலையில் மக்கள் வெளியே வருவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா-?” என்றாள். 13. “உம், நான் அங்கே செல்லத்தான் வேண்டும். ஏனென்றால் நான் வருவேன் என்று வாக்கு கொடுத்து விட்டேன். புரிகின்றதா-? நான் அதைச் செய்ய வேண்டும் என்று ஜோசப்பிற்கு வாக்களித்துள்ளேன்". 14. இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால் இக்காலையில் இந்த சிறிய சுவிசேஷ செய்திக்கு பிறகு கூட்டத்தை முடிப்போம். சுவிசேஷ செய்திக்காக அவருடைய வார்த்தையை திறப்பதற்கு முன்பாக... கூட்டம் முடிந்தவுடன் நீங்கள் வீடு சென்று உங்கள் இரவு ஆகாரத்தை உண்ணலாம். நாங்களும் அங்கே இருக்கின்ற அந்த சாலையில் எங்கள் பிரயாணத்தில் இருப்போம். எங்களுக்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டிருப்பீர்களா-? அதைச் செய்யுங்கள். இந்த அருமையான ஜனக்கூட்டத்தைக் காண்பதற்காக மிக்க நன்றி உள்ளவனாக இருக்கின்றேன். 15. இப்பொழுது, இந்த புஸ்தகத்தின் ஆக்கியோனிடமாக சிறிது பேசுவோமாக... எங்கள் பரலோகப்பிதாவே, பரலோகத்திலிருந்து இங்கே பூமிக்கு வந்து மாம்சமாக்கப்பட்டு எங்கள் மத்தியில் வாசம் செய்து, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாகிய கர்த்தராகிய இயேசுவுக்காக நாங்கள் இன்று உமக்கு நன்றி கூறுகிறோம். அவ்விதமாகச் செய்ததன் மூலம், சில காலமாக பாவத்தினாலும் மீறுதலினாலும் ஒன்றாயிராமல் தனித் தனியாக வெவ்வேறு மூலையில் இருந்த தேவனையும் மனிதனையும் ஒப்புரவாக்கினார். ஆனால், இப்பொழுது நாங்கள் அவருடைய தோன்றுதலினாலே தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக நாங்கள் இருக்கின்றோம். முடிவிலே நாங்கள் எப்படியாக இருப்போம் என்று இன்னுமாக காட்சியில் வரவில்லையாயினும், ஆனாலும், அவரைப்போலாக நாங்கள் காணப்படுவோம் என்று நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஏனெனில் அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தை நாங்கள் கொண்டிருப்போம். பனி இல்லாத, தொல்லைகள் இல்லாத, இருதய வேதனைகள் இல்லாத, துக்கம் இல்லாத ஒரு உலகத்திலே நாங்கள் வாழுவோம். ஆகவே இப்பொழுது, அந்த நேரத்திற்காக நாங்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கையில், வேதாகமத்திலிருந்து உம்முடைய விலையேறப் பெற்ற வாக்குத் தத்தங்களை இழுக்கின்றோம், இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து தேவனுடைய வார்த்தையை எடுத்து எங்களுக்கு தேவையாய் இருக்கையில் அதை எடுத்து ஒவ்வொரு இருதயத்திற்கும் அளிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கின்றோம். இதை நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கின்றோம். ஆமென். 16. நேராக எசேக்கியேலுக்கு திருப்புவோமாக... உங்களுக்குக் கூறத்தக்கதாக பயண விவரங்கள் சிலவற்றை எழுதி வைத்துள்ளேன். அதை முன்னரே... வேத வசனத்தை வாசிப்பதற்கு முன்னர் - அதைக்குறித்து நான் நினைக்கவில்லை, என்னை மன்னிக்கவும், என்னுடைய புத்தக அடையாளத்தைத் தொட்டுப் பார்க்க நேர்ந்தது. 17. இப்பொழுது, மிச்சிகனிலுள்ள ஸ்டர்கிஸை விட்டு புறப்பட்டப் பிறகு, வருகின்ற வாரத்தில் நான் ஒஹையோவிலுள்ள லீமாவில், அங்கே முனிசிபல் கூட்ட அரங்கில் பாப்டிஸ்ட் மக்களுடன் நான் இருப்பேன். பிறகு நான் மின்னியோபோலிஸிற்கு செல்கிறேன், பிப்ரவரி 10 தேதியிலிருந்து 17 வரைக்குமாக, திரு. பீட்டர்சன். அதற்கு அடுத்து வருகின்ற ஞாயிறன்று நான் சகோதரன் மூர் அவர்களுடன் ஷ்ரீவ்போர்டில் ஒரு இரவு இருப்பேன், பிறகு பத்திலிருந்து 10 வரைக்குமாக பிப்ரவரி .... இல்லை பிப்ரவரி 26 தேதியிலிருந்து மார்ச்சு மாதம் 10 தேதி வரைக்குமாக அரிசோனாவிலுள்ள ஃபீனிக்ஸில், மடிசன்ஸ்குயர் கார்டன்ஸில் இருப்பேன். அதற்கு பிறகு மார்ச்சு 17 தேதியிலிருந்து சான் ஃபெர்னான்டோ பள்ளத்தாக்கில் சகோதரன் எஸ்பினோசாவுடன் நான் துவங்குகிறேன். பிறகு 19-லிருந்து நான் சிவிக் அரங்கத்தில் பிலெடெல்பியன் சபையுடன் நான் துவங்குகிறேன். அது கலிபோர்னியாவிலுள்ள ஒக்லாண்டில் உள்ள பெரிய கூட்ட அரங்கமாகும். நாங்கள் திரும்பி வருகிறோம். பிறகு அதிலிருந்து ஜூன் மாதம் வரைக்குமாக கனடா தேசத்தில் உள்ள ஆறு பெரிய நகரங்களுக்கு நான் செல்கிறேன். 18. ஜூன் மாதத்தில் நான் திட்டமிடுவது, கர்த்தருக்கு சித்தமானால், இது அதற்கு பிறகு... முதலாவதாக பிலெடெல்பியன் சபை பிறகு மறுபடியுமாக இண்டியானா போலிஸில் சர்வதேச பிரதர்-ஹுட் கூட்டம் இருக்கின்றது. அதைக் குறித்து சகோதரன் ஜோசப்பிற்குத் தெரியும். பிறகு அங்கிருந்து நேராக புறப்பட்டு ஆப்பிரிக்காவில் டேவிட்டுப்பளெலிஸ் அவர்களை சந்தித்து, பிறகு அங்கிருந்து நேராக ஆப்பிரிக்காவிற்கு உள்ளாக சென்று வரவிருக்கின்ற இலையுதிர் காலம் வரை அங்கே இருக்க நான் எதிர்பார்க்கின்றேன். அத்திட்டம் கைக் கூடாமல் போனால் நான் ஜூலையில் சகோதரன் கார்ல்சனுடன் கிறிஸ்டியன் பிசினஸ்மென் கூட்டத்தாருடன் நான் இருப்பேன். அதை அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இன்னும் தெளிவாக எதுவும் எனக்குத் தெரியாது என்று நான் அவரிடமாகக் கூறியுள்ளேன், ஏனென்றால் இங்கே இரண்டு விதமான எண்ணத்திற்கிடையே நான் இருக்கின்றேன். வருகின்ற ஜூலையில் சிக்காகோவில் உள்ள அந்த பெரிய கன்வென்ஷன் கூட்டத்திற்காக நான் கர்த்தரிடம் கேட்கையில் எந்த விதமாக நான் திரும்பிச் செல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே எங்களுக்காக ஜெபிக்கவும். 19. 6-ல்... எசேக்கியல் 26-ஆம் அதிகாரத்தில் 26-வது வசனத்திலிருந்து துவங்கி நாம் வாசிப்போமாக. உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்தில் இருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக் கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன். நான் உங்கள்... (நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென நான் விழைகின்ற பகுதி இதுவாகும்). நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; உங்களுடைய முதற்பலனை நான் உங்களுக்குக் கொடுப்பேன் (I will give you your first fruits) 20. இப்பொழுது, கர்த்தராகிய இயேசு தாமே, தமக்கு சித்தமாயிருக்கும் பட்சத்தில், தம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையின் வாசித்தலின் பேரிலே தம்முடைய ஆசீர்வாதங்களை நமக்கு அளிக்கும்படியாக நான் விரும்புகிறேன். 21. இப்பொழுது, நாம் இக்காலை இதைக்குறித்து தான் பேசப்போகிறேன், எதன் காரணமாக... சகோதரன் டேவிட், இதைக்குறித்து, நான் பேசப்போகும் இதைக்குறித்து விசேஷமாக நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நீங்களும் கூட ஜெபிக்கவும்; அது ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை உண்டு பண்ணுவதற்கு என்ன தேவைப்படுகின்றதாய் உள்ளது.? கிறிஸ்தவ வாழ்க்கையை அமைத்து உருவாக்குவது எது-? 22. இப்பொழுது, நாம் அறிந்திராத அநேக காரியங்கள் உண்டு. அது என்ன .... நாம் ஒருபோதும் ...நமக்கு - நமக்கு தெரியாத அநேக காரியங்கள் உண்டு. நாம் அறிந்து கொள்ள தேவன் அனுமதிக்கின்ற நிறைய காரியங்கள் உள்ளது. ஆகவே இப்பொழுது, நான் அறிந்துள்ள காரியங்களானது, நாம் தேவனுடைய வார்த்தையைச் சுற்றிலும் மற்றும் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டு இந்த காரியங்களை கண்டு கொள்ள விரும்புகிறோம். இப்பொழுது, நாங்கள் அவருடைய வார்த்தையை எடுத்துரைக்கையில் தேவன் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பவேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன், நீங்கள் எல்லோரும் நினைவில் கொண்டு ஜெபியுங்கள். 23. இப்பொழுது ஆரம்பமாக, சபை இடமாக சரியாக இல்லாது இருக்கின்ற ஒன்றானது எப்பொழுதுமே இருந்து வருகின்றது. ஆம் அது பிசாசே என்று நாம் உணர்ந்திருக்கின்றோம். மேய்ப்பரின் படிக்கின்ற அறையிலே சில நிமிடங்களுக்கு முன்னர் நானும் சகோதரன் கார்ல்ஸனும் இதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். மக்களின் மத்தியில் ஏதோ ஒன்றில் குறைப்பாடு காணப்படுகின்றது என்பதாக இருக்கின்றது. என்னுடைய கருத்துக்களை நான் கொண்டிருக்கின்றேன், நம்மால் முடிந்த வரைக்குமாக குறுக்கே இருப்பவைகளை மற்றும் தடுப்பு சுவர்களை நோக்கி வேகமாக அடித்துக்கொண்டிருக்கின்றோம், ஆனால் இன்னுமாக எதிர்ப்பு என்னும் சுவர்களை நம்மால் தகர்த்து வீழ்த்துவதில் வெற்றியைக் காண முடியவில்லை. ஆனால் எப்படியாயினும் அந்த குண்டுகள் வீசுவதற்காக அந்த சுவரில் சில துளைகளை ஏற்படுத்தியுள்ளோம். அதினாலே ஒரு நாளிலே மக்களின் மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடு என்னும் இந்த பெரிய சுவரானது தகர்க்கப்பட்டு விழும். அப்பொழுது தேவனுடைய மகத்தான ஒன்று சேர்ந்த சேனையானது ஒன்றாக அந்த மகத்தான போர்க் களத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரே மகத்தான கொடியுடனே முன்னே செல்லும். அது தான் என்னுடைய மனமார்ந்த நம்பிக்கை ஆகும் 24. இப்பொழுது, ஜீவனுள்ள தேவனுடைய சபையானது, சாத்தியத்தின் தூணாக இருக்கின்ற அது... இந்த சபையானது ஒரு வல்லமை நிறைந்த சபையாக, ஒரு மகிமையுள்ள சபையாக, கிறிஸ்து மணவாட்டியாக இருக்க எதிர்ப்பார்க்கப்பட்ட, நியமிக்கப்பட்ட ஒருவள் என்று முழு உலகமும் நோக்கிப் பார்க்கின்ற ஒரு சபையாக, தேவனுக்கு பெருமை அளிக்கும் விதத்தில் தன்னை ஒழுங்கான விதத்தில் நடந்து கொண்டு ஜீவியம் செய்கின்ற ஒரு சபையாக இருக்கும் படியாகத் தான் தேவன் எண்ணம் கொண்டு உள்ளார். அது அந்த விதமாகத்தான் ஜீவிக்க வேண்டும் - சபைக்கான குணாதிசயத்திலே அது காணப்பட வேண்டும், ஆகவே அந்த விதமாகத் தான் அது ஜீவிக்க வேண்டியதாய் இருக்கின்றது. ஆனால் அநேக முறை நாம் காண்பதென்னவெனில் மக்கள் நல்ல எண்ணத்துடனே நோக்கத்துடனே தங்களை கிறிஸ்தவர்களாக நடத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். அவர்கள், "ஆம், நான் இன்னின்னவன் ஆகவே-ஆகவே நான் இந்த விதமாகத்தான் வாழவேண்டும்" என்று கூற முயற்சி செய்கின்றனர். 25. இப்பொழுது, சபையானது அந்த விதமாக அதை நோக்கிப் பார்க்காமல் இருக்குமானால்... ஆனால் கிறிஸ்தவமும் மற்றும் சபையும்... கிறிஸ்தவமானது ஸ்தாபனங்களாலும் போதகங் களாலும் ஆளப்படவேண்டும் என்று தேவன் ஒரு போதும் எண்ணங்கொள்ளவில்லை அல்லது அவர்... தேவன் தாமே சபையானது போதகங்களாலும் ஸ்தாபனங்களாலும் மற்றும் அறிவாற்றல் நிறைந்த அறிஞர்களால் ஆளப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று எண்ணம் கொண்டோ அல்லது அனுமதித்திருப்பாரானால், அப்படியானால் சபையிலே பரிசுத்த ஆவி நமக்குத் தேவைப்படாது. அப்படியானால் நம்முடைய சபையானது... சபையின் வெற்றியானது நம்மிடையே இருக்கின்ற அறிவாற்றல் நிறைந்த அறிஞர்களில் சிறந்தவர்களின் பேரிலே தான் சார்ந்திருக்கும். அப்படியாகத்தான் நம்முடைய சபையானது இருந்திருக்கும், அல்லது நம்முடைய சபையில் இன்னும் பெரிய சிறந்த அறிவுத்திறமிக்கவர்களை கொண்டு இருக்கையில், நம்- நம் சபையானது இன்னும் படிப்படியாக முன்னோக்கிச் சென்றதாக இருந்து இருக்கும். 26. ஆனால் சபையானது அறிவாற்றல் திறத்தினாலோ அல்லது மனிதனின் எந்த விதமான வேதாகமக் கல்லூரி அறிவினாலோ ஆளப்படவேண்டும் என்று தேவன் எத்தனிக்கவில்லை என்றும் சபையை ஆளவும் கிறிஸ்துவின் சரீரத்தை இயக்க, செயலாட்சி செய்யவே பரிசுத்த ஆவியானது சபைக்கு அருளப்பட்டுள்ளது என்று வார்த்தையில் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நம்முடைய நோக்கங்கள் எவ்வளவு நல்லவையாக இருந்தாலும் சரி, நாம் பரிசுத்த ஆவி... தேவனுடைய திட்டத்தின் மையத்திற்கு நாம் திரும்பவும் சென்றாலொழிய, அறிவாற்றல் திறம், வேதாகம கலாசாலை அறிவிலே நாம் காரியத்தை செய்தல், அதை மனதில் கொண்டு இருப்பவர்களாக இருப்பது என்றால், தேவனுடைய திட்டத்திலே நாம் ஒரு போதும் வெற்றி பெறவே மாட்டோம் என்று நான் நினைக்கின்றேன். 27. இப்பொழுது பிரசங்கம் செய்வதற்கு இது ஒரு புதிய காரியம் அல்ல என்று உணர்ந்தவனாக, இது அநேக முறை பிரசங்கிக்கப்பட்ட ஒன்று, ஆனால் அதை நாம் அணுகும் முறையானது, அதை நாம் எடுத்துக் கொள்ளும் முறையானது, இது இன்னுமாக பரிசுத்த ஆவியினால் இயக்கப்படுகின்ற சபையென்று நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் இன்னுமாக நாம் நம்முடைய அறிவுத்திறமான காரியங்களை இதனுடனே கலந்து இதை பரிசுத்த ஆவி மற்றும் அறிவுத்திறத்தின் காரியங்கள் இரண்டுமே கலந்து ஒரு கதம்பக் கூளத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம். மேலும் பரிசுத்த ஆவியானவர் ஒரு காரியத்தை செய்ய வாஞ்சிக்கையில், ஒன்றை தாழ்த்தவும் அல்லது ஒன்றை உயர்த்தவும் விரும்புகையில், அது மக்களின் மத்தியிலே கீழ்த்தரமான பொறாமைகள் உண்டாகும்படிக்குச் செய்கிறது, அப்படியாக அவர்கள் பொறாமை கொள்ளும் போது அவர்கள் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை என்று அது நிரூபிக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஸ்தானத்திலே இருக்கவே விரும்புவான். 28. இப்பொழுது, இதிலே மக்கள் ஒரு காரணத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் மிக அதிக அளவிலே ஸ்தாபனங்களையும் மற்றும் மிக அநேக வித்தியாசப்பட்ட சர்வாதிகாரிகளையும் அவர்கள் கண்டுள்ளனர், அது என்னவென்றால் சபையில் இதை மற்றும் அதை மாத்திரமே கூறுகின்ற ஆவிக்குரிய சர்வாதிகாரிகள். ஆனால் பரிசுத்தாவி தாமே நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவின் சரீரத்திலே வைத்திருக்கின்றார். ஆகவே சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினரின் செயல்பாடு இல்லாமல் நம்மால் தனியாக திறம்பட செயலாற்ற உதவியில்லாமல் இருப்போம். என் கரங்கள், என் புயங்கள், என் வாய், என் கண்கள், என்னுடைய... என்னில் இருக்கின்ற ஒவ்வொரு அங்கமும் செயலாற்றினால் தான் என் சரீரம் பரிபூரணமாக செயல்படும். ஆகவே தேவன் தாமே தம்முடைய சரீரமாகிய சபை, தம்முடைய ஆவியினாலே ஆளப்படவேண்டுமென்று விரும்புவாரானால், நாம் ஏற்கெனவே கொண்டிருந்ததைக் காட்டிலும் வேறே ஒரு காரியத்திற்குள்ளாக செல்லும்படியாக மற்றொரு வழியோ அல்லது ஒரு திட்டமோ இருக்கத்தான் வேண்டும். 29. இப்பொழுது, வேதாகமம் இங்கே கூறுகின்றது, எசேக்கியேல் பேசுகின்றான்... எசேக்கியேல் ஒரு தீர்க்கதரிசி. ஆனால், அவன் “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து...'' என்று கூறினான். அது எனக்குப் பிடிக்கும், புதிதாக நாம் செய்யப்போவதைக் குறித்து தேவன் பேசுவது எப்பொழுதுமே எனக்குப் பிடிக்கும். அவர் ஒரு போதும்... அவர் அவ்விதமாக இப்பொழுது... அப்படியானால் பழைய நிலைமையுடனே சற்று அவர் ஒட்டுத் தையல் போடுவது கிடையாது. ஆனால் “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்களுக்கு புதிதான ஆவியை கட்டளையிட்டு நீங்கள் கொண்டிருக்கின்ற கல்லான இருதயத்தை எடுத்துப் போடுவேன்”. 30. அவர் ஒரு போதும் - பழைய சபையை புதிப்பித்து ஒப்பனையாக்கும் காரியத்தை அவர் ஒரு போதும் செய்யவே மாட்டார். அவர் ஒரு புத்தம் புதிய சபையைத்தான் அவர் கொண்டிருப்பார். அவ்விதமாகச் செய்யப்படுகையில் உங்களால் பழைய அறிவாற்றல் திறமிக்க சபையை ஒரு புதிய பெந்தெகொஸ்தே அனுபவத்தைக் கொண்டிருக்கும் சபையுடன் கலக்கவே முடியாது. 31. அந்த அதே காரியத்தைத் தான் லூக்காவில் அவர் பழைய துருத்திகளிலே புதிய திராட்சரசத்தை உங்களால் வார்த்து வைக்க முடியாது என்று கூறினார். நான் ஒரு - ஒரு மிஷனரி ஆவதற்கு முன்னால் அவை என்ன என்று என்னால் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. நான், "சரி, பாட்டில் என்று அழைக்கும் இது பழையதாக ஆகாது" என்று நினைத்தேன். ஆனால் பாலஸ்தீன தேசத்திலே அக்காலத்திலே அந்த - அந்த துருத்தி, பாட்டில் என்றால் ஒரு மிருகத்தின் பதப்படுத்தப்பட்ட தோலினால் சுற்றிலும் தைக்கப்பட்டு உருவாக்கப் பட்டிருந்தது, அந்த தோலிலே சில திரவ வடிவுடைய நீர் (liquid) இருந்தன. அதிலே அவர்கள் தண்ணீர், திராட்சரசம் மற்றும் எண்ணெய்களை ஊற்றி வைத்தனர், அவைகளை அந்த தோலான துருத்திகளில் கொண்டு சென்றனர். 32. இப்பொழுது, அந்த தோல் பழையதானவுடன் உலர்ந்து போய்விடும். அதைத் தான் இயேசு பேசிக் கொண்டிருந்தார், ''பழைய துருத்திகளில் புது திராட்சரசத்தை வார்த்து வைத்தல்'' என்றார், அவ்விதம் செய்தால் இரண்டுமே வீணாகிப்போய் விடும். உன்னுடைய திராட்ச ரசத்தையும் இழப்பாய், உன்னுடைய துருத்தியையும் நீ இழப்பாய். 33. இப்பொழுது, ஒரு பழைய துருத்தியில் தண்ணீரை உங்களால் வார்த்து வைக்க முடியும். ஆனால் பழைய துருத்தியிலே உங்களால் புதிய திராட்சரசத்தை வைக்க முடியாது. ஏனென்றால் தண்ணீரானது ஹைட்ரோஜன், நீரகம் மற்றும் ஆக்ஸிஜன், உயிரகம் ஆகியவைகள் சேர்ந்த ஒன்றாகும். அவை இருக்கும் வரையில் உலராமல் இருக்கும், அவைகளில் ஒன்று குறையுமானால், அது சுருங்கும். அதிலே ஜீவன் இருக்காது, ஆகவே ஹைட்ரோஜன் மற்றும் ஆக்ஸி....ஹைட்ரோஜனும் ஆக்ஸிஜனும் தான் அந்த கலவையாகும். 34. ஆகவே... ஆனால் திராட்சரசத்தில் ஜீவன் உள்ளது. அந்த திராட்சரசம், விசேஷமாக புதிய திராட்சரசமானது, அது இன்னுமாக கிளர்ச்சியுற்ற நிலையிலே இருக்கின்றது, அது இன்னுமாக சற்றும் பொங்கி விரிவடையும். ஆகவே அது பழைய துருத்தியில் வார்த்து வைக்கப்பட்டு பொங்கி விரிவடையுமானால், அது அந்த தோலில் மோதி அந்த தோல் வெடித்து திறந்து கொள்ளும். இப்பொழுது அது... அப்பொழுது அந்த தோல் பாழாகிவிடும். துருத்தியும் கூட வீணாகிவிடும். அந்த துருத்தி பாழாகி திராட்சரசமும வெளியே சிந்திவிடும். 35. இப்பொழுது, இன்றைக்கு நம்மிடையே இருக்கும் காட்சி அதுவேயாகும். ஒரு பழைய குளிர்ந்து போன அறிவாற்றல் திறமிக்கவர்களின் குழுவிடம் வந்து உங்கள் கருத்துக்களைக் கொண்டு தேவனுடைய திட்டத்தை உங்களுடைய அறிவாற்றல் மிக்க திட்டத்துக்குள்ளாக சேர்க்க முயற்சிப்பதானது உங்களால் ஒருக்காலும் முடியாது. அது கிரியை செய்யாது. அந்த பழைய மாட்டுத்தோலானது வெடித்து விடும். அதினாலே அதை உள்ளே வைத்துக் கொள்ள முடியாது. 36. இப்பொழுது, புதிய துருத்தியானது புதிய பதப்படுத்தப்பட்ட தோலினால் செய்யப்பட்டது ஆகும். அந்த புதிய பதப்படுத்தப்பட்ட தோலிலே அந்த மிருகத்தின் எண்ணெயானது இன்னுமாக இருக்கும். அந்த புதிய துருத்தியிலே புதிய திராட்சரசமானது உள்ளே செல்லும் போது, அந்த புதிய திராட்சரசமானது உள்ளே பெருக ஆரம்பிக்கையில் புதிய துருத்தியும் அது பெருகும்படிக்கு வழிவகுக்கும். அதுவும் பெரிதாகும். ஏனென்றால் அந்த தோலில் எண்ணெய் இருக்கின்றது. ஆகவே சபைக்கு எண்ணெய் ஊற்றப்படுதல் தேவைப்படுகின்ற ஒரு காலமானது இருக்குமென்றால் அது இன்றைக்கே: பரிசுத்த ஆவியின் எண்ணெய் ஊற்றுதல்: புதிய திராட்சரசம். 37. இப்பொழுது வேதாகமம், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்” என்று கூறுமானால், அவருடைய சுகமளிக்கும் வல்லமையானது முன்பு எப்படி இருந்ததோ அதே போலத்தான் இன்றும் மகத்தானதாக இருக்கின்றது. அந்த பழைய அறிவாற்றல் திறமிக்கவர்கள் வெடித்துப் போவார்கள். ''அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. டாக்டர் ஜோன்ஸ் அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது” என்று கூறியுள்ளார். அவ்வளவு தான். 38. ஆனால் புதிய திராட்சரசமானது புதிய துருத்திக்குள்ளாக வார்க்கப்படும் போது, அப்பொழுது அது சற்று கிளர்ச்சியுற ஆரம்பிக்கும், நாம் வழக்கமாக ஆராய்கின்ற அந்த பழைய வெளிப்புற வேத கலாசாலையிலிருந்து உள்ளே ஜீவனானது கிரியை செய்ய ஆரம்பித்து, தேவனுடைய வார்த்தையானது அதனுடைய தெய்வீக வாக்குத்தத்தங்களில் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று கூறியுள்ளதை காணும் போது அந்த புதிய திராட்சரசமானது "அல்லேலூயா” என்று கூறும்-! அப்பொழுது பழைய துருத்தி “தேவனுக்கு மகிமை” என்று கூறி விரிவடையத் துவங்கி, புதிய திராட்சரசம் பெருக இடம் கொடுக்கும். அதைத்தான் நாம் பெறுகிறோம். 39. அது அல்ல... புதிய திராட்சரசத்தை பழைய துருத்தியில் வார்த்து வைத்தால், "இதோ பாருங்கள். எங்கள் வேதக்கலாசாலை வேறு விதமாகக் கூறுகிறது, எங்கள் ஸ்தாபனம்......'' எனலாம். அந்த பழைய உலர்ந்து போன மாட்டுத் தோல்... நீங்கள்.... “இக்காரியங்களெல்லாம் முடிந்து விட்டனவே என எங்கள் போதகர்களும் மேய்ப்பர்களும் கூறுகின்றனர்.'' 40. ஆனால் அது ஒரு புதிய தோலாக இருந்து அதனுள்ளே புதிய ஜீவனைக் கொண்டு இருக்குமானால், அது உடையாமல் எளிதில் இசைந்து கொடுக்கின்ற ஒன்றாக இருக்கும். அது வார்த்தைக்கென இசைந்து கொடுக்கும். அந்த வார்த்தை ஆவியை ஆதரிக்கும். அல்லது அந்த ஆவி வார்த்தைக்கு உறுதுணையாக இருக்கும், ஆகவே அவை அந்த புதிய துருத்திக்குள்ளாக வரும். மேலும் அவர்கள், "கடந்த மாலையில் ஒருவர் புற்று நோயிலிருந்து சுகமாக்கப்பட்டார்” என்று கூறுவார்கள், அப்பொழுது அந்த பழைய தோல், “மருத்துவர் என்ன கூறுகிறார் என்று நான் பார்க்கட்டும். இன்றையலிருந்து ஒரு வருடத்திற்கு பிறகு என்ன என்று நான் பார்க்கட்டும். அதை என்னால் விசுவாசிக்க முடியவில்லை” என்று கூறும். 41. ஆனால் புதிய தோல், “ஆட்டுக்குட்டியானவருக்கு அல்லேலூயா” என்று கூறி விரிவடையும். அப்பொழுது திராட்சரசமும் மற்றும் துருத்தியும் அப்படியே இருக்கும். புதிய திராட்சரசத்தை பழைய துருத்திகளில் உங்களால் வார்த்து வைக்க முடியாது. 42. அநேக வருடங்களுக்கு முன்னர் எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை அது நினைவுபடுத்துகின்றது. அதை நான் உங்களுக்கு கூறியுள்ளேனா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. வேட்டையாடுவதற்கென நான் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்தேன், ஒரு இரவு நான் அங்கே காட்டில் இருந்தேன். என் வாழ்நாளிலே நான் காட்டில் வளர்க்கப்பட்ட ஒருவனாயிருந்தபடியால் நான் ஒரு நல்ல வேட்டைக்காரன் என்று நினைத்து இருந்தேன். நான் திரும்ப நேர்ந்தது. ஒரு வயதான கரடியை நான் துரத்திக் கொண்டிருந்தேன், அந்த கரடியை புகைப்படம் எடுக்க வேண்டுமென நான் விரும்பினேன். கரடியை சுடும்படியாக எனக்கு உரிமம் வழங்கப்படவில்லை. ஏனென்றால் நான் ஆடுகளை வேட்டையாடிக் கொண்டிருந்தேன், ஆகவே இந்த கிரிஸ்லி கரடியின் அருகாமையிலே செல்ல விரும்பினேன். அது ஒரு அழகான மிருகமாக இருந்தது, ஆகவே அந்த மிருகத்தின் புகைப் படத்தை நான் எடுக்க விரும்பினேன். 43. பிரசங்கியை தூக்கி எறிய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த ஒரு மூன்று வயதான இளம் குதிரையின் மேல் நான் சென்றுக் கொண்டிருந்தேன், ஏனென்றால் அது... நாள் முழுவதுமாக அது என்னை தூக்கி எறிய வேண்டும் என்றே பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தது. ஏனென்றால் அந்த குதிரையை வேகமாக செல்ல வைக்கும் குதிமுள்ளால் அதைச்சற்று குத்தி காட்டிலே காற்றால் மரங்கள் மொத்தமாக கீழே சாய்ந்து விழுந்திருந்த இடங்களினூடாகவும் மற்ற இடங்களிலும் குதிரையை செலுத்திக் கொண்டிருந்தேன், அந்த கரடி சென்று கொண்டு இருந்த போது அதனிடமாக சென்றடைய வேண்டும் என்று குதிரையை வேகமாக செலுத்தினேன். 44. நான் சென்று கொண்டே இருந்து நான் திரும்பும்படியான ஒரு நிலையை அடைந்தேன். ஆகவே நான் திரும்பி வந்து கொண்டிருந்த போது, பொதுவான திசைகளை அறிந்தவனாக... மரத்தின் வடக்குப்பகுதியில் உள்ள பாசியை (MOSS) அறிந்து கொள்ளும்படியாக நான் வளர்க்கப்பட்டிருந்தேன். அங்கே அந்த பாசி இல்லையென்றால் உங்கள் கண்களை மூடி மரத்தை உங்கள் மனதிலே கொண்டு உங்கள் கையை கொண்டு மரத்தின் பட்டையை பிடித்துக் கொண்டே அப்படியே திரும்பி உங்கள் கை தடிமனான பகுதியில் படும்போது நின்று பார்த்தால் அதுதான் வடக்குப்புறமாகும். ஆகவே காட்டில் நீங்கள் பிழைத்துக் கொள்ளும் படியாக நீங்கள் அறிந்திருக்க வேண்டிய அநேக காரியங்கள் உள்ளன. 45. ஆகவே நீங்கள் ஆவிக்குரிய விதத்திலே பிழைத்துக் கொள்ள அதே போன்று தான் காரியம் ஆகும். உங்களை வழிநடத்துகின்ற மற்றும் உங்களுக்கு போதிக்கின்ற உங்கள் சிருஷ்டிகராகிய அவரை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவர்களாக உள்ளீர்கள். 46. ஆகவே நான் மேலே ஏறி வருகையில் கவனித்தேன், என்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டேன், பொதுவான திசையில் திரும்பவுமாக செல்ல ஆரம்பித்தேன். ஏனென்றால் எந்த ஒரு உயிரையும் கூட காணாமல் நூற்றுக்கணக்கான மைல்கள் சென்று விடுவீர்கள். என்னுடைய பொதுவான திசைகளை நான் அறிந்து கொண்டு பிறகு... சிறிது நேரத்திற்குப் பிறகு நான் அங்கே உள்ள அந்த மலை உச்சியை நோக்கிப் பார்ப்பேன். அதிலிருந்து அன்றிரவு திரும்பிச் செல்ல என் வழியைக் கண்டுபிடித்துச் செல்வேன். 47. அன்று மத்தியானப் பொழுதில் மழை பெய்து புயல் அடித்துக் கொண்டு இருந்ததால் நான் சற்று ஆச்சரியப்பட்டிருந்தேன், சற்று... என்னை திரும்பும்படிக்குச் செய்தது. ஆனால் மேகங்கள் விலகிக் கொண்டிருந்தன. ஆதலால் அங்கே பெரிய வெள்ளை மேகங்கள் வானத்தில் இருந்தன. நிலவு மிக அழகாக தன்னுடைய வெளிச்சத்தை கீழே பிரகாசிப்பித்துக் கொண்டிருந்தது. அப்போது நான் அந்த காட்டிலே காற்றால் மரங்கள் மொத்தமாக கீழே சாய்ந்து விழுந்திருந்த இடத்தில் நின்றேன். நான்... அங்கே மரங்கள் எரிந்துப் போயிருந்த இடத்தில் இருந்தேன். இங்கே நகரத்தில் உள்ள மக்களாகிய உங்களுக்கு மரம் எரிந்து போயுள்ள இடம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. அது என்னவென்றால் காட்டில் காற்று வேகமாக வீசும் போது அதனுடன் சேர்ந்து நெருப்பும் வீசும். அப்படி வீசுகையில் அதிலுள்ள எல்லாவற்றையும் கொன்று போடும். அநேக சமயங்களில் மரங்கள் அப்படியே இருக்கும். ஆனால் பட்டைகள் நெருப்பினால் எரிந்து போயிருக்கும். அதன் பிறகு சிறு கறையான்கள் அந்த மரப்பட்டைக்குள்ளாகச் சென்று விடும். நெருப்பு அந்த பட்டையை பதம் பார்க்கும். அப்போது அந்த மரப்பட்டை கீழே விழும், பிறகு அதை கறையான்கள் தின்று விடும். ஆனால் அந்த பழைய மரமானது ஒரு மொட்டையான முறிந்த அடிமரக்கட்டைப் போல நின்று கொண்டிருக்கும், அதில் ஜீவனே இருக்காது, அதைச் சுற்றிலும் தாவர உயிர்ச்சார் மற்றும் அது போன்றானது எதுவும் இல்லை. அந்த மரமானது மரிக்கின்றது. ஏனென்றால் அந்த தாவர உயிர்ச்சாரானது மரத்தின் பட்டையினூடாக தான் வரும். 48. இப்பொழுது, அங்கே நான் நின்று கொண்டிருந்தபோது, மிகவுமாக திகைப்படைந்தேன், நான் குதிரையைக் கட்டினேன்... அந்த குதிரையானது மிகவுமாக களைத்துப் போயிருந்தது, சில நிமிடங்கள் நிற்கும்படியாக நிச்சயமாகவே நான் ஏவப்பட்டதை உணர்ந்தேன். அப்பொழுது நான், “பிதாவாகிய தேவனே, நீர் என்னுடைய பிதா என்பதை அறிந்திருப்பதற்கு மிகவுமாக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வேட்டையாடுவதற்கென இப்பொழுது எனக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கையில் இந்த வேட்டைப்பயணத்திற்காக இந்த அருமையான பிரதேசத்திற்குள்ளே வந்துள்ளேன். இங்கே உம்முடைய மிருகங்களை காணவும் மற்றும் என்னுடைய மகிழ்ச்சிக்காக நீர் தாமே உண்டாக்கியுள்ள காரியங்களையும் காணவும் வந்துள்ளேன். இந்த காரியங்களுக்காக நான் எவ்வளவாக உமக்கு நன்றி செலுத்துகிறேன்" என்றேன். பிரிட்டிஷ் கொலம்பியாவை மாத்திரமே உங்களால் காண முடியும். ஒரு காடுகளில் இருப்பவர் அல்லது ஒரு வேட்டைக்காரனால் தான் அந்த அழகான காரியங்களை நோக்கிப் பார்க்கையில் அவைகளை உணர்ந்து பாராட்ட முடியும். 49. அப்பொழுது ஒரு விநோதமான காரியத்தை கவனிக்க ஆரம்பித்தேன். மிகவும் சோர்ந்து போயுள்ளது போலக் காணப்பட்ட ஒரு சத்தமானது வந்து கொண்டிருந்தது. புயல் அடித்து விட்டுச் சென்ற பிறகு காற்று வீசிக்கொண்டிருந்தது. "பட்டர்மில்க், நீர்மோர் வானம்” என்று நாங்கள் அழைப்பது போல, மேகங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன. அந்த வெள்ளை மேகங்கள் வானத்தில் சிறு கொப்புளங்கள் போல காணப்பட்டன. நிலவு தன் பிரகாசத்தை கீழே நோக்கிப் பரப்பிக் கொண்டிருந்தது. காற்றானது வீசிக் கொண்டிருந்தது. அப்பொழுது மிகவும் சோர்வுற்றது போன்றதான ஒரு சத்தமானது வர ஆரம்பித்தது. அது துயர்தருகிற, வருத்தம் நிறைந்த ஒரு சத்தம்போல, வேதனைக்குரல் போல, அழுது புலம்பல் போல, ஊ.. ஊ... ஊஹ் என்றவாறே இருந்தது. நிலவானது அந்த உலர்ந்த மொட்டையான மரங்களின் மேலாக பிரகாசித்த போது, அவை கல்லறைக்கற்களைப் போலக்காணப்பட்டது. அதனோடு கூட அந்த துயர்தருகிற, வருத்தம் நிறைந்த அந்த சத்தம், ஊ... ஊ... ஊஹ், என்ன ஒரு பயங்கரமான காரியம். அப்பொழுது நான், “இப்பொழுது, இவைகளின் அர்த்தம் என்னவோ-?” என்றேன். 50. நீதிமான்களின் நடைகள் கர்த்தரால் கட்டளை இடப்பட்டுள்ளது என்று நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கின்றது. காரியங்கள் அந்த விதமாக சம்பவிக்கும்படிக்கு தேவன் அவைகளை வரும்படிக்குச் செய்கின்றார். அது அவருடைய மக்களுக்காக கொண்டுள்ள அவருடைய மகத்தான அன்பாகும். சில சமயங்களில் அவர் உங்களை சில இருண்ட இடங்களினூடாக கொண்டு செல்ல வேண்டியவராக இருக்கின்றார், எதற்காக என்றால் உங்களுக்கு வெளிச்சத்தைக் காண்பிக்கவே. ஆகவே நம்முடைய பிதா தான் அந்த காரியங்களை செய்து கொண்டிருக்கின்றார். 51. ஆகவே நான் விசுவாசிப்பது என்னவென்றால் இன்றைக்கு சபையானது அதனுடைய நிலையில் தானே... ஏறக்குறைய உடைகின்ற ஒரு இடத்திற்கு தான் தேவன் சபையைக் கொண்டு வருகின்றார், என்ன ஒரு களிகூருதலான சமயம் அது. அவர் சீயோன் மலையிலே உட்கார்ந்திருக்கையில், பூமி முழுவதுமாக அவரைச் சுற்றி நின்று, மீட்கப்பட்டவர்கள் மீட்பைக் குறித்து பாடுகையில், தூதர்கள் பக்கவரிசையாக தலைகளைத் தாழ்த்தியவாறே நிற்கையில் ஒரு நாளிலே மீட்கப்பட்டவர்கள் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாகிய இயேசுவுக்கு கிரீடம் சூட்ட நிற்பார்கள். தூதர்களுக்கு அது புரியாது. அவர்கள் ஒருக்காலும் மீட்கப்படவே இல்லை. மீட்கப்பட வேண்டும் என்கின்ற உணர்வைக் கூட அவர்கள் கொண்டிருக்கவில்லை. இழந்து போதல் என்பது என்ன அர்த்தம் என்று அழிவுள்ள மானிடர்களாகிய நமக்குத்தான் தெரியும்; ஒரு தூதனுக்கு இழந்து போதல் என்றால் என்ன என்று தெரியாது. ஆகவே மீட்பின் பாடலில் உள்ள சந்தோஷத்தை நம் ஒருவரால் மாத்திரமே பெற்றுக்கொள்ள இயலும்; சபையிலும் கூட அவ்விதமாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். 52. ஆகவே நான் அங்கே நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன், மேலும் நான்... அந்த துயர்தருகின்ற, வருத்தம் நிறைந்த சத்தமானது - அப்போது நான், “ஓ, இது ஒரு பயங்கரமான இடம்” என்று நினைத்தேன். இது மிகவும் பேய் போன்று உள்ளதே (அவ்விதமாகத் தான் அதை நாங்கள் தெருவில் அழைப்போம்) அது மிகவும் பயங்கரமான ஒரு இடமாகும். "ஓ தேவனே, என் சிறு குதிரையை இங்கே நான் கட்டி அதற்கு இங்கே சிறிது ஓய்வு கொடுக்கவும் இங்கே இருக்கவும் நீர் ஏன் இவ்விதமாகச் செய்தீர்-? நாங்கள் இன்னும் சிறிது அப்பாலே சென்று அங்கே குதிரையை கட்டி இருந்திருப்பேனே.'' ஆனால் என்னவாயிருந்தாலும் அது தேவன் எனக்கு ஏதோ ஒன்றை போதித்தல் ஆகும். ஆகவே நான், “இதன் எல்லாவற்றின் அர்த்தம் என்ன-?” என்றேன். 53. அப்பொழுது நான் அந்த கல்லறைக் கற்களைக் குறித்து சிந்தித்தேன், அவை கல்லறைக் கற்களைப் போல காணப்பட்டது. அந்த துயர்தருகின்ற சத்தத்தைக் கொண்ட காற்றானது அந்த மர உச்சியினூடாக வேகமாக பெருஞ்சத்தமாக வீசி அதினாலே சோர்வுற்ற ஒரு உணர்வுடனே கூட ஒரு பரபரப்பான ஒரு உணர்வு உண்டாக்கினது, ஒரு விதமான பயம் கொள்கின்ற ஒரு சூழலுக்கொத்த ஒரு உணர்வை அந்த மலை உச்சியிலிருந்து வந்தது. நான், “கர்த்தருடைய ஊழியக்காரனாகிய எனக்கு இந்த விதமான ஒரு காட்சியானது அளிக்கப் படுகின்றது ஏன்-? பிதாவே, எந்தவிதமான ஒரு காட்சியை எனக்கு முன்பாக அமைக்கின்றீர்-?” என்று நினைத்தேன். 54. அப்போது நான் தூர நோக்கிப் பார்த்துக்கொண்டே என்ன என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது யோவேலிலிருந்து ஒரு வேத வசனமானது என் நினைவுக்கு வந்தது போலிருந்தது, “பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது; முசுக்கட்டை பூச்சி தூக்கி விட்டதை மற்றைய பூச்சிகள் தின்றன.' 55. அப்பொழுது நான், “அது உண்மை; அது சரியே” என்று எண்ணினேன். இப்பொழுது இங்கே பார், அங்கிருந்த அந்த மிக மகத்தான மரங்கள் ஒரு காலத்திலே மிக மிகப்பெரிய மரங்களாக அங்கே நின்றுகொண்டிருந்தன. காற்று வீசின போது அம்மரங்கள் முன்னும் பின்னுமாக அதனுடைய விசையாற்றலைக் கொண்டு அசைந்தன. காற்று வீசின போது அந்த மலையின் மேல் இருந்த அந்த வானளாவிய உயரமான மரமானது முன்னும் பின்னுமாக அசைதலானது என்ன ஒரு கம்பீரமான காட்சியாக இருந்திருக்கும். ஆனால் இப்பொழுதோ, அவைகளால் என்ன செய்ய முடியும்-? இனி மேலும் எந்த ஒரு காற்றின் கூடவே அவைகளால் அசைய முடியாது. ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது. அவைகள் மரித்துப் போயுள்ளன, காற்றினால் வீசமுடியும், ஆனால் அம்மரங்களோ விரைத்துப்போன ஒரு நிலையில், அசைவில்லாமல் மிகவும் விரைப்பாக நிற்பதனால், காற்று வீசி அவைகளினூடாக செல்கையில் அவை அசையாமலிருப்பதால் அதினாலே துயர் தருகின்ற வேதனையான சத்தத்தைத் தான் பிறப்பிக்க முடிகின்றது, வானத்தில் காற்றினாலே ஒரு காலத்திலே ஒரு அழகான தாளச் சத்தத்துடனே அந்த இலைக்கதிரானது அழகாக முன்னும் பின்னுமாக அசைந்தது. அந்த அழகான தாளச் சத்தத்திற்கு பதிலாக இந்த விதமான ஒரு சத்தத்தை மாத்திரமே அது பிறப்பித்துக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது அம்மரங்கள் வெறுமையாகவும் துக்கக் கரமாகவும் தான் இருக்க முடியும். அப்பொழுது நான், “ஆம், கர்த்தாவே, அது தான் காரியம்” என்று நினைத்தேன். 56. அப்பொழுது நான் லூத்தரன்களையும், மெத்தோடிஸ்டுகளையும் குறித்து சிந்தித்துப் பார்த்தேன், ஏன், பெந்தெகொஸ்தே, நசரீன்கள், பில்கிரிம் ஹோலினஸ் ஸ்தாபனத்தினர் மற்றும் நம்மிடையேயுள்ள மிகப்பெரிய சபைகளைக்குறித்தும் சிந்தித்துப் பார்த்தேன். அவர்களுடைய ஆரம்பக் கட்டத்தில் எப்படியாக அவர்களிடமாக அந்த ஜீவனின் ஓட்டமானது இருந்தது என்றும் நான் சிந்தித்துப் பார்க்கின்றேன்; பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு உள்ளாக இருந்தார். அன்று பெந்தெகொஸ்தே நாளிலே அவர் செய்தது போல தேவன் பலத்த காற்று அடிக்கும் முழக்கம் போல அனுப்பினார், அவர்கள் தங்களின் மீது அந்த மகத்தான பசுமையான காரியத்தை உடையவர்களாக எப்படியாக அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களில் துள்ளி களிகூர்ந்தனர்; காற்றும் அவர்களுக்குள்ளாக ஒரு கப்பலின் மேல் சீராக வீசுவது போல வீசி அதினாலே அவர்கள் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருந்தனர், எழுப்புதலுக்குப் பிறகு எழுப்புதல் நடந்தது. 57. ஆனால் ஏதோ ஒன்று அங்கே வந்து நடந்தேறியது. அடக்குமுறையின் தீப்பிழம்புகள், சபையின் அந்த புதிய - அந்த புதிய விதிமுறை... அவர்கள் வேதாகமக் கல்லூரிகளுக்கு சென்று, மிகவும் திறமைசாலிகளும் அறிவாற்றல் திறமிக்க இளைஞர்களையும் மனிதர்களையும் எடுத்து அவர்களுக்கு போதித்து பழங்கால பரிசுத்தாவியின் அபிஷேகத்தை எடுத்து வெளியே போட்டனர்; ஜீவ ஓட்டத்தை அவர்கள் வெட்டி எறிந்தனர். 58. தேசங்களை மெத்தோடிஸ்ட் எழுப்புதல்கள் விழுந்த போது பள்ளிக்கூடங்களில் அவர்கள் தரையில் படுத்துக்கிடந்து பரிசுத்தாவியைப் பெற்றுக் கொண்டு இன்றைக்கு நாம் ''அடித்து வீழ்த்தப்பட்டார்” என்று நாம் இன்று கூறுவது போல... அல்லது அவர்கள் மயக்கமுற்று இருக்கிறார்கள் என்று அந்நாட்களில் அவர்கள் நினைத்தது போல அவ்வித நிலையில் இருப்பார்கள். ஆகவே இங்கே நம் பாப்டிஸ்ட் சபையில், என்னுடைய பாப்டிஸ்ட் சபையில் ஜனங்கள் பரிசுத்தாவியின் வல்லமையின் கீழாக படுத்திருக்கையில் பிரசங்க பீடத்திலிருந்து அவர்கள் பாத்திரங்கள் நிரம்ப தண்ணீரை எடுத்து ஜனங்களின் முகங்களில் ஊற்றி அவர்களுக்கு காற்றை விசிறி அழுவதை நான் கண்டிருக்கிறேன். 59. ஆனால் புதிய போதகர்கள், அந்த பழங்கால நாட்டுப்புற சபை பாணியானது அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் தாமே இன்னும் விரிவுப்படுத்தப்பட்ட, இன்னும் அதிக அளவிலான புதுமையுடனே, கல்வியறிவின் பாணியினாலானதை உள்ளே கொண்டு வந்து உள்ளனர். பிரசங்க பீடத்தின் பக்கங்கள் மிகவும் மேலான விதத்தில் அலங்கரிக்கப்படுதல் அல்லது டைப் ஆர்கன் இசைக்கருவி வைத்தல், மற்றும் சபையில் இருக்கைகளெல்லாம் மென்மையான மெத்தைத் துணியால் போர்த்தப்பட்டு இருத்தல், ஆகவே - ஆகவே அந்த பழைய சபையானது வேண்டாம் என அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. அந்த பழைய பீடமானது எடுத்துப் போடப்பட்டது. அந்த பழங்கால பாணியிலான அழுகின்றவர்களின் கட்டை பெஞ்சுகள் எடுக்கப்பட்டு கட்டடத்தின் அடிவாரத்தில் போடப்பட்டன. பீடங்களின் மேல் ஆத்துமாக்களுக்கு பதிலாக, லீலிப்பூக்கள் பீடத்தில் மேல் வைக்கப்பட்டன. ஒரு கட்டையை அல்லது இசை கவைக்கோலைக் கொண்டு காற்றழுத்த விசையைக் கொண்டு இயக்கப்பட்ட பழங்கால பாணியிலான ஆர்கன் இசைக்கருவிக்கு பதிலாக ..... 60. அவர்கள், "நான்...-?நான் மரிக்கும் நிலைக்கு வந்தாலும் எந்த ஒரு தீமைக்கும் அஞ்ச மாட்டேன்” என்று பாடினர், ஆனால் அதற்கு பதிலாக இன்னிசையோடு ஒலிக்கின்ற குரலினால் மிகவும் பயிற்றுவிக்கப்பட்ட பாடல் குழுவினர் அந்த விதமான பாடல்களைப் பாடி தங்கள் முகங்கள் நீல நிறத்தில் மாறும் வரைக்குமாக ராகத்தை அப்படியே பாடுகின்ற பாடல் குழுவினர் வைக்கப்பட்டனர். அதைப் போன்று பாடுவதை உயர்தரம் என்று அவர்கள் அழைக்கின்றனர். முகம் நீல நிறத்தில் மாறும் வரைக்குமாக குரலிசைப்பை இசைக்குறியீடு மாற்றாமல் அப்படியே பாடுகின்ற மிகவும் அதிகளவில் பழக்குவிக்கப்பட்ட ஒரு குரலைக் கேட்பதானது, அது நான் உட்கார்ந்து கேட்டதிலே மிகவும் இழிவான ஒன்றாகும். அது புறப்பட்டு, வேடிக்கை காட்டுவது தவிர வேறொன்றும் அல்ல. நீங்கள் தேவனுடைய மகிமைக்காக பாடுவதில்லை. வானத்தின் கீழ் இருக்கின்ற மிகவும் இனிமையான காரியம் என்னவென்றால் ஒரு பழங்கால பாணியிலான பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்ட, ஆவியினால் நிரப்பப்பட்டு, எல்லோரும் ஆவியினாலே பாடுகின்ற ஒரு சபையாகும். 61. அவர்கள் பாடலை எடுத்துப் போட்ட போது ஜீவ ஓட்டத்தை வெட்டி எடுத்துப் போட்டு விட்டனர். அவர்கள் சபையிலிருந்து அற்புதங்களின் நாட்களை எடுத்துப் போட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு பதிலாக தங்கள் வேதாகம கலாசாலைப் படிப்புகளையும் மற்றும் அறிவாற்றல் திறமிக்கவர்களையும் எடுத்துக்கொண்ட போது அவர்கள் ஜீவ ஓட்டத்தை வெட்டி எடுத்துப் போட்டு விட்டனர். அவர்கள் மகத்தான ஸ்தாபனங்கள் என்பதில் துளியளவு சந்தேகம் இல்லை. ஆனால் அவைகள் மிகப்பெரிய மரங்களாக இருந்தன. அவர்கள் மகத்தான காரியங்களை கொண்டிருந்ததை வரலாற்றைக் கொண்டு அவர்களால் நிரூபிக்க முடியும். அது தானே... அந்த காட்டை நோக்கிப் பார்க்கும் எந்த ஒருவராலும் அங்கிருந்த அந்த மரங்கள் ஒரு காலத்தில் மிகவும் செழித்து வளர்ந்திருந்த மரங்கள் தான் என்று நிரூபிக்க முடியும். ஆனால், ஓ, இன்றைக்கு அவைகளோ ஒன்றுமில்லாத மொட்டை மரங்கள் தவிர வேறொன்றும் இல்லை. அதிலிருந்து ஜீவ ஓட்டம் போய் விட்டது. 62. தேவன் தம்முடைய மரங்கள் மகிழ்ச்சியினால் துள்ளி குதிக்கும்படிக்கும், அம்மரங்கள் ஆடுவதனால் புதிய ஜீவனைப் பெறும்படிக்கும் தம்முடைய காற்றை கீழே அனுப்புகையில், அந்த மரங்களால் என்ன செய்ய முடியும்-? அவைகளால் அந்த துயர்தருகின்ற வேதனையான சத்தத்தைத்தான் பிறப்பிக்க முடியும், "இதோ இந்த சபை மக்களுக்கு நான் கூறுகின்றதாவது, உங்களில் யாராவது அந்த சுகமளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வீர்களானால், உடனடியாக இந்த ஐக்கியத்திலிருந்து சபை பிரஷ்டம் செய்யப்பட்டு புறம்பாக்கப்படுவீர்கள்'' என்கின்ற தான சத்தம். நிர்வாகம் செய்வதற்கான புலணுர்விற்கு அப்பாற்பட்டு அதிகமான அறிவாற்றல் திறமை மற்றும் ஒரு உயர்ரக டக்ஸடோ கோட்டை அணிந்தவனாக தசைப் பிடிப்பு கொண்ட ஒரு கன்று குட்டி குனிவது போல குனிந்து கொண்டே "ஆமென்” என்று கூறும் ஒரு சிறு பிரசங்கி வந்து பரிசுத்தாவியானவரின் இடத்தை எடுத்துக்கொள்ள முயற்சி செய்தல். 63. தேவன் தம்முடைய மக்களுக்கென கொண்டிருக்கும் நித்திய திட்டமானது சபையில் பரிசுத்தாவியும், அந்த பரிசுத்தாவியினால் இயக்கப்படுகின்ற மறுபடியும் பிறந்த ஆண்களும் பெண்களுமே, அவர்கள் பரிசுத்த ஆவியை இயக்க முயற்சிப்பது என்பதல்ல, ஆனால் பரிசுத்த ஆவி அவர்களை இயக்குவித்தலாகும். உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா-? 64. நான் அந்த மரங்களைப் பார்த்த போது, "அவைகளைக் குறித்தென்ன-?" என்று எண்ணினேன். அப்பொழுது நான், “ஆம், எப்பொழுதுமே அது செய்வது போல வானத்திலிருந்து காற்றானது வருகின்றது” என்று நினைத்தேன். மேலும் கிறிஸ்து மாறாதவராய் இருக்கின்றார். பெந்தெகொஸ்தே நாளிலே வானத்திலிருந்து பலத்த காற்று அடிக்கும் முழக்கம் போல வந்தது. மக்களும் அதைப் பெற்றுக்கொண்டனர். ஏனென்றால் அவர்கள் எளிதில் பின்பற்றுபவர்களாக, இசைந்து கொடுக்கிறவர்களாக இருந்தனர். அவர்கள் தேவனுடைய வழியை எடுத்துக்கொள்ள விருப்பம் உடையவர்களாக இருந்தனர். 65. ஆனால் இப்பொழுது நாம் காண்பது என்னவென்றால் ஒரு மகத்தான சுகமளிக்கும் கூட்டங்களையும் அல்லது மகத்தான அற்புதங்கள் மற்றும் அடையாளங்களையும் கீழே அனுப்பி மற்றும் வேதாகமத்தில் உள்ள அடையாளங்கள் மறுபடியுமாக சபைக்கு திரும்பவுமாக வந்திருக்கையில், அந்த பெரிய அறிவாற்றல் திறமிக்க குழுவினர் கூறுவது என்ன என்று தெரியுமா-? "அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. தெய்வீக சுகமளித்தல் என்பதான ஒன்று கிடையவே கிடையாது. பரிசுத்தாவியின் அபிஷேகம் என்பது இல்லை. என்னுடைய சபைக்கு நான் அதை கூறுவேனாக, ஏழைகள் மாத்திரம், புறம்பாக்கப்பட்டவர்கள் மாத்திரம், எழுத்தறிவில்லாத மக்கள் வகையினர் மாத்திரமே அந்த கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். அவர்களிடமாக செல்லுங்கள், நீங்களே தெரிந்து கொள்ளலாம்.” ஆம் அந்த மனிதன் உண்மையாகத் தான் கூறுகின்றான். அந்த மனிதன் அவ்விதமாகக் கூறுகையில் அவன் உண்மையைத்தான் கூறுகின்றான். வழக்கமாக ஏழைகள் தான் வருவர், அறிவாற்றல் திறமிக்கவர்கள் அல்ல. கல்வியறிவு பெற்றிராதவர்கள் மட்டுமே. வேதாகமம் "பொது ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்” என்று கூறுகின்றது. 66. இப்பொழுது, நீங்கள் விரும்புவீர்களானால் மறுபடியுமாக அதை நாம் பார்ப்போமாக. அப்பொழுது நான், "எந்த ஒரு பலத்த காற்றும் அனுப்பப்பட்டு அதை பெற்றுக் கொள்ள எதுவுமே இல்லாதிருக்கையில் அதை அனுப்புவதனால் என்ன பிரயோஜனம்-?” என்று நான் யோசித்தேன். ஆனால் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்திற்கு தனியுரிமை உள்ளவராக சுயாதிபத்தியம் உள்ளவராயிருக்கிறார். ஆதலால் அவர் அதை அனுப்ப வேண்டியவராக இருக்கின்றார். அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கின்றார். “இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், இதோ நான் உலக முடிவு பரியந்தம் நான் உங்களுடனே கூட இருப்பேன். நான் செய்கின்ற காரியங்களை நீங்களும் செய்வீர்கள்.'' தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை அனுப்ப வேண்டியவராய் இருக்கின்றார். 67. நான், “சரி, கர்த்தாவே, என்ன சம்பவிக்கும்-?" என்று எண்ணினேன். அப்பொழுது நான் கவனிக்க ஆரம்பித்தேன். கவனியுங்கள். அப்பொழுது நான் கவனித்தது என்னவென்றால் இந்த மரங்கள் விழுந்த பிறகு, அம்மரங்கள் கொண்டிருந்த அந்த பெரிய கூர் நுனி மர உச்சியில் இருந்த சில சிறிய விதைகள் அம்மரங்களிலிருந்து வெளிவந்து விழுந்தன. நிச்சயமாக அந்த விதைகள் தாமே அந்த மரத்தின் ஜீவனாக இருந்தன. ஆகவே அந்த விதைகள் நிலத்தில் விழுந்தன. நெருப்பு அதைக் கடந்து சென்றிருந்த போதிலும் இந்த எல்லா காரியங்களும் சம்பவத்திருந்த போதிலும் இன்னுமாக அதன் கீழாக வளர்ச்சியானது காணப்பட்டது. மரங்கள் மறுபடியுமாக வளரத் துவங்கின. வளைந்து கொடுக்கும் விதத்திலான மரங்கள், தங்களில் ஜீவனைக் கொண்டிருந்த இளம்மரங்கள். பழையவைகளின் அடிப்புறத்திலிருந்து வளர்ந்தவை. இன்று நாம் அழைக்கும் விதமாக, “அந்த தோல்வியுறுபவன்” அந்த பிரசங்கி பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, "ஆமென்” என்று கத்தி கூச்சல் போட்டதால், அதைப்போன்ற ஒன்றைச் செய்ததால் அந்த மனிதனானவன் அந்த பெரிய சபையிலிருந்து எட்டி உதைத்து வெளியே தள்ளப்பட்டான். ஆனால் எப்படியாயினும், அது ஜீவனின் சிறிது பங்காயிருந்து அல்லது பழைய ஆதியில் துவக்கத்தில் இருந்து போதிக்கப்பட்ட போதனைகளாலே, மெத்தோடிஸ்ட், லூத்தரன் மற்றும் பெந்தெகொஸ்தே மற்றும் இன்னும் பிறவற்றிலிருந்து முன்பு அவைகள் இருந்தது போல அவைகளிலிருந்து வந்த போதனைகள். 68. ஆகவே, அப்பொழுது அந்த காற்றானது கீழே விழுந்த போது, அந்த வயதான மரமானது துயர்தருகிற, வருத்தம் நிறைந்த சத்தமிட்டது. ஆனால் அந்த சிறிய மரமோ ஒரு எழுப்புதலைக் கொண்டிருந்தது என்பதை நான் கவனித்தேன். அது குதித்து சுற்றி, சுற்றி, சுற்றி, சுற்றி ஓடினது; சுற்றி ஆரவாரம் செய்தது. கர்த்தரை துதித்துக்கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்தது. அப்பொழுது நான், “சரி, ஒரு காரியத்தை நம்மால் கூற முடியும்; அந்த பழையது கொண்டு இருக்கும் கல்வியை இது ஒருக்கால் கொண்டிருக்காது; இது பச்சையாக காணப்படலாம். ஆனால் வளைந்து கொடுக்கும் விதத்தில் இருக்கின்றது. ஆகவே அதைத்தான் - அதைத்தான் தேவன் செய்து கொண்டிருக்கின்றார்” என்று நினைத்தேன். ஆகவே தேவன் தம்முடைய மரங்களை அசைத்து அவைகளை சற்று நெகிழ்த்துகிறார் என்பதை தேவனுடனான அனுபவத்தில் நான் கவனித்தேன். ஆகவே ஒவ்வொரு சமயமும் ஒரு மரமானது அசைந்து குலுங்குகையில் அது வேர்களை இழுத்து அவைகளை சற்று தளர்த்தி நெகிழ்த்தி விடுகிறது. அதினாலே அவைகள் இன்னுமாக கீழே வளர்ந்து சென்று இன்னும் உறுதியான பிடிப்பு ஆற்றலைப் பெறும். 69. இப்பொழுது, லூத்தரன் விட்டதை மெத்தோடிஸ்டுகள் தின்றனர்; மெத்தோடிஸ்ட் விட்டதை பாப்டிஸ்ட் தின்றது; பாப்டிஸ்ட் விட்டதை பிரஸ்பிடேரியன்கள் தின்றனர்; பிரஸ்பிடேரியன்கள் விட்டதை நசரீன்கள் தின்றனர்; நசரீன்கள் விட்டதை பெந்தெகொஸ்தே தின்றது. " நான் திரும்ப அளிப்பேன்” என்று கர்த்தர் உரைக்கின்றார். "நான் திரும்ப அளிப்பேன்''. ஆகவே திரும்ப அளிக்கத்தக்கதாக தேவன் தம்முடைய ஆவியின் மகத்தான அசைவிலே வருகின்றார். 70. கவனியுங்கள், தேவன் தாமே 120-புத்தம் புதிய துருத்திகளை, வளைந்து கொடுக்கும் நெகிழ்ந்த தன்மையுடையவைகளான புதிய பச்சை துருத்திகளை, பாட்டில்களை, அங்கே மேலறையிலே வைத்தார். ஆகவே அங்கே பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகினது. அப்பொழுது அவர்களெல்லாரும் புதிய பெந்தெகொஸ்தே திராட்சரசத்தினால் நிரப்பப்பட்டார்கள். ஓ, என்ன ஒரு கிரியை செய்தல் மற்றும் அசைவு மற்றும் எப்படிப்பட்ட ஒரு வெடித்தலானது அங்கே இருந்திருக்கும், எப்படியாக அந்த துருத்திகள் துள்ளிக் கொண்டும் குதித்துக்கொண்டும் இருந்தன. அவைகள் தங்களுக்குள்ளாக ஜீவனைக் கொண்டிருந்தன. 71. இப்பொழுது அந்த பழைய துருத்தியானது, "இது அதிதீவிர மூடபக்தி வைராக்கியமாகும்” என்று கூறலாம். ஆனால் அந்த புதிய துருத்தி ஜீவனைக் கொண்டிருந்தது. ஆதலால் அது விரியத் துவங்கினது, ஆவியானவர் கூறின எல்லாவற்றிற்கும் “ஆமென்” என்று சத்தமிட்டது. அந்த பழைய போதனையின் ஒழுக்க முறைக்கு எதிராக இருந்த சில காரியங்கள் தொடர்ந்து நடந்தன, ஆனாலும் அவைகள் புதிய துருத்திகளாக இருந்ததால் அவைகளால் அதில் நிற்க முடிந்தது. ஆகவே தேவன் தம்முடைய துருத்திகளை எடுத்து ... 72. இப்பொழுது, முடிப்பதற்கு முன் சில நிமிடங்களுக்கு நீங்கள் சற்று கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். நீங்கள் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். ஆகவே இப்பொழுது சற்று கூர்ந்து கவனியுங்கள். வேதாகமத்தின் ஒழுங்கை கவனியுங்கள். "உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்களுக்கு புதிதான ஆவியை கட்டளையிட்டு.'' இப்பொழுது, இருதயமானது பரிசுத்த ஆவி வாசம் பண்ணுகின்ற இடமாகும். ''உங்களுக்கு புதிய ஆவியைக் கட்டளையிடுவேன்.'' அந்த ஒழுங்கை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது மக்கள் நிறைய பேர்கள் இந்த காரியத்திலே குழப்பமடைகின்றார்கள். தாங்கள் பரிசுத்தாவியைக் கொண்டிருப்பதாக நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் புதிய ஆவியை மாத்திரமே பெறுகின்றார்கள். கவனியுங்கள். “நான் உங்களுக்கு நவமான இருதயத்தையும் புதிய ஆவியையும் கொடுப்பேன். அதன் பிறகு என்னுடைய ஆவியை வைப்பேன்...'' இப்பொழுது, அந்த புதிய ஆவியானது... தேவன் உங்களுக்கு ஒரு புதிய ஆவியை அளிக்க வேண்டியவராக இருக்கின்றார், அதுவோ நீங்கள் பரிசுத்தாவியுடன் இசைந்து செல்லத்தக்கதாக தேவன் உங்களுக்கு அளித்திருக்கின்ற ஒரு புதிய ஆவியாகும். நீங்கள் முன்னதாக கொண்டிருந்த அந்த பழைய ஆவியினாலே, உங்களால் உங்கள் பக்கத்து வீட்டு நபருடன் இசைந்து போக முடியாதிருந்தது; உங்களுடனே கூட உங்களால் இசைந்து போக முடியாதிருந்தது; ஆகவே உங்களால் தேவனுடனும் இசைந்து போக முடியாதிருந்தது; ஆதலால் தேவன் உங்களுக்கு புதிய ஆவியை அளிக்கின்றார். 73. அநேக சமயங்களில் ஆர்வ மிகுதியினாலே நீங்கள் அந்த ஜீவனானது... நான் உங்களை புண்படுத்தவில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் நான் மறைந்திருப்பதை திறந்டு அளிக்கின்றேன் என்று நம்புகின்றேன். பாருங்கள்-? நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டு இருப்பதாக அநேக முறை நினைத்திருப்பீர்கள். “ஓ, நான் பாடினேன்; நான் அந்நிய பாஷையில் பேசினேன்” என்று நீங்கள் கூறியிருப்பீர்கள். நிச்சயமாக, நீங்கள் அதனுடனே மிக அருகாமையில் இருப்பதால் உங்களால் அவைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும், ஆனால் அது இன்னுமாக பரிசுத்தாவி இல்லை, பாருங்கள்-? பரிசுத்தாவி இயேசு கிறிஸ்துவினுடைய சாட்சியைக் கொண்டதாக இருக்கும். 74. இப்பொழுது, அவர் எடுக்கின்றார், பிறகு அவர் செய்வது என்ன-? அவர் உங்களுக்கு நவமான இருதயத்தை கொடுக்கின்றார், புதிய ஆவியை உங்களுக்குக் கொடுக்கின்றார், அதன் பிறகு அவர் தம்முடைய ஆவியை, தம்முடைய ஆவியை உங்களுக்குள்ளாக வைக்கின்றார். அது ஒரு... நீங்கள் அங்குமிங்கும் சென்று நான் ஒரு கிறிஸ்தவன் என்னும் விதத்தில் பாசாங்கு செய்யவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. அந்த புதிய ஆவியானது புதிய ஜீவனைப் பிறப்பிக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய புதிய ஆவியில், உங்களுடைய புதிய இருதயத்தில்... உங்களுடைய புதிய இருதயத்தில், உங்களுடைய புதிய ஆவியில் வந்து, அந்த பரிசுத்தாவி சரியாக உங்களுடைய புதிய ஆவியின் மையப் பகுதிக்குள்ளாகச் செல்கின்றது. அப்பொழுது உங்களுடைய புதிய ஆவியானது சரியாக நேராக உங்கள் புதிய இருதயத்தின் மையப்பகுதிக்குள் செல்கின்றது. 75. ஆகவே அது எப்படியென்றால் ஒரு சிறந்த கைகடிகாரத்தில் முதன்மை கம்பிச்சுருள், ஸ்பிரிங்க் (Main Spring) போன்றதே. அது தானாகவே சுற்றுகின்றது. சரி, அது சரியாக அந்த புதிய ஆவியின் மையப்பகுதியில் இருக்கின்றது. ஒரு சிறந்த கைக்கடிகாரத்தின் முதன்மை கம்பிச்சுருளானது அந்த கைக்கடிகாரத்தின் மையப்பகுதியில் இருந்து கொண்டு நேரத்தைக் காண்பிக்கும் முள்ளானது சரியாக ஓடும் வகையில், அந்த கடிகாரத்தின் ஒவ்வொரு அங்கத்தையும், அதினுள் இருக்கின்ற ஒவ்வொரு சிறு பொருளையும் பரிபூரணமாக இயங்கச் செய்கின்றது. அதின் எல்லாவற்றையும் இயக்குவது அந்த முதன்மை கம்பிச்சுருள் மாத்திரமே. இந்த முதன்மை கம்பிச் சுருளுடன் கூட ஒரு சிறிய பொருளானது கூடவே வேலை செய்து கொண்டிருக்கும். அது எசேக்கியேல் கூறுவது போல, சக்கரத்திற்குள் சக்கரம் போல. 76. இப்பொழுது, நீங்கள் பரிசுத்தாவியைப் பெறும் போது அது சரியாக நேராக உங்களுடையதான அந்த புதிய இட அமைப்பின் நடுப்பகுதிக்குச் செல்கின்றது. நீங்கள், “ஓ, நான் மது குடிப்பதை நிறுத்தி விட்டேன்; சிகரெட் புகைப்பதை நிறுத்திவிட்டேன். ஆதலால் நான் - நான் - நான் ஒரு வித்தியாசமான மனிதனாக உணருகிறேன் தெரியுமா" என்று கூறலாம். ஊ...ப்ஸ். ஒரு நிமிடம் பொறுங்கள். பார், நீங்கள் ஒரு புதிய ஆவியைத்தான் பெற்றுள்ளீர்கள். ஆனால் பரிசுத்த ஆவி அந்த ஆவியின் மையப்பகுதிக்கு உள்ளே வருகின்றது, அப்பொழுது அவர் உங்களுடைய ஒவ்வொரு - ஒவ்வொரு முக்கியமான அசைவுகளை, ஒவ்வொரு அறிவார்ந்த காரியத்தையும் செய்கின்றார், செய்யப்படுகின்ற ஒவ்வொன்றும் சரியாக அந்த சக்கரத்தின் மையப்பகுதியுடனே ஒத்துப்போகும். தேவன் கூறுவது என்ன என்றால்... [ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) அற்புதங்களின் நாட்கள்... இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றால், பரிசுத்த ஆவி தாமே அதனுடனே சாட்சி பகரும், உங்களுடைய ஒவ்வொரு அறிவார்ந்த அசைவும் அந்த அதே காரியத்தைத் தான் கூறும். 77. ஆகவே, நீங்கள் இந்த சிறிய கோபப்படும் காரியத்தைக் கொண்டு நீங்கள் கோபத்தால் தலை தெறிக்கும்படி ஆவதும், மற்றும் பொய்களைக் கூறுதல், ஒரு கருத்திலிருந்து மறு கருத்திற்கு மாறுவது, ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவைச் சேர்ந்து கொள்வது மற்றும் நீங்கள் சார்ந்திருக்கும் ஸ்தாபனத்தில் நீங்கள் மிகவும் சுயநலவாதியாக இருந்து மற்றொரு ஊழியக்காரர் கூறுவதை கேளாமல் போகும் அளவிற்கு மிகவும் குறுகின மனப்பான்மையுடன் இருத்தல் என்பது போல இருப்பீர்களானால், நினைவில் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளாக ஓடிக்கொண்டிருக்கவில்லை என்பதாகும். வியூ. அதைக் கூறப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் - ஆனால் அது சரியே. பாருங்கள்-? 78. பரிசுத்த ஆவி ஒவ்வொரு அசைவும் கிறிஸ்துவைப் போல இருக்கும்படிக்குச் செய்வார். அது உங்களை கிறிஸ்துவைப் போல் இருக்கும்படிக்குச் செய்யும். ஆவியின் கனிகள் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை, விசுவாசம். இந்த காரியங்களையும், நம்முடைய உணர்ச்சிவசப்படுதலையும் தான் பரிசுத்த ஆவி கட்டுக்குள்ளாக வைத்து இயக்குகின்றது. 79. நம்முடைய உணர்ச்சிவசங்கள் அதிகமாக மேலும் கீழுமாக குதித்தல் அல்ல. உங்களால் அதைச் செய்ய முடியும். ஒரு சிறு மது விருந்து கூட உங்களை மேலும் கீழுமாக குதிக்கச் செய்யும். ஆனால் பரிசுத்த ஆவி உங்களை செயல்முறையில் கொண்டு வந்து வைக்கும் அல்லது தேவனுடைய கட்டுக்குள்ளாக வைத்து அதினாலே உங்களால் சமாதானத்திலும், அன்பிலும், சந்தோஷத்தோடு கூட நீடிய பொறுமையிலும், நற்குணத்திலும், சாந்தத்திலும், தயவிலும், பொறுமையிலும் நடக்க ஏதுவாகின்றது. உங்களுக்குப் புரிகின்றதா-? அது நீங்கள் செய்கின்ற ஒன்றல்ல. அது பரிசுத்த ஆவி உங்களுக்குள்ளாக இருந்து கிரியை செய்கின்ற ஒன்றாகும். சற்று பாருங்கள், அது இன்னுமாக உங்களுடைய அறிவாற்றல் திறத்தின் சிந்தனை அல்ல; அது உங்களுக்குள்ளாக உள் நினைவில் பரிசுத்த ஆவியானவர் அசைவாடுவது ஆகும். ஓ, அதற்காக நான் தேவனுடைய துதிகளை உலக முழுவதுமாக சத்தமிட என்னால் முடியுமானால் அப்படியாகச் செய்ய நான் விரும்புகிறேன். 80. ஜீவனுள்ள தேவனுடைய சபை, அங்கே தான் நம்முடைய பெந்தெகொஸ்தே அசைவானது தோல்வியுற்றது. நாம் ஏதோ ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட இசை, கைகளைத் தட்டுதல், உணர்ச்சி வசப்பட்டு மேலும் கீழுமாகக் குதித்தல் ஆகியவற்றை கொண்டுள்ளோம். ஆனால் நாம் அங்கே வெளியே தெருவில் செல்லும் போது அதனுடன் கூட ஒத்துப் போகும்படியாக நம்முடைய ஜீவியங்களை பரிசுத்த ஆவி ஆட்கொள்வதில்லை. நாம் பரிசுத்த ஆவியை இன்னுமாகப் பெற்று இருக்கவில்லை. அது ஆடை எடுக்கப்பட்ட பால் அல்ல. ஆனால், சகோதரனே, அது தான் சபைக்குத் தேவையாயிருக்கின்றது. பரிசுத்த ஆவியினால் மாத்திரம் தான் ஜீவனானது வரமுடியும். 81. தேவன் தம்முடைய வேதாகமத்தில் எவ்வளவு அதிசயமான விதத்தில் அவர் காரியங்களைச் செய்தார் என்று எப்பொழுதாவது நீங்கள் கவனித்ததுண்டா-? இதோ சற்று பாருங்கள். இயேசு, "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கமாட்டான் என்று கூறினார். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் - நீங்கள் கட்டாயமாக அப்படியாக மறுபடியும் பிறக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள், 82. அது என்னவாயிருக்கின்றது-? அது நீங்கள் சத்தமிடுவது அல்லது அந்நிய பாஷையில் பேசின அனுபவத்தைக் கொண்டிருப்பது என்பதல்ல. அக்காரியங்கள் அருமையானதே. ஆனால் இக்காலையில் நான் பேசிக் கொண்டிருப்பது அதை - அதைக் குறித்து அல்ல. உங்களுடைய ஜீவியமானது ஒத்துப் போகவில்லையெனில் அல்லது நீங்கள் அந்நிய பாஷையில் பேசுகையில் பெறுகின்ற உணர்ச்சிவசத்திற்கு சாட்சியாக அது இல்லையெனில், அப்படியானால் நீங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதாகும். ஏனென்றால் பரிசுத்த ஆவி தாமே உங்களுடைய உள்ளார்ந்ததை எடுத்து நீங்கள் இருக்கும் வண்ணமாக அது உங்களை ஆட்கொண்டு நடத்தும், உங்களை உண்டாக்கும், ஒரு கிறிஸ்தவ மனிதனாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ அது உங்களை உருவாக்கும். அது உங்கள் ஜீவியத்தினோடே கூட இருந்து சரி என்றும் குறியீடு செய்யும். உங்களுக்காக இருந்து உங்களை உந்தித்தள்ளுகின்ற ஒன்றானது இருக்கின்றது. எப்படியாயினும் அதை நீங்கள் செய்யும்படிக்கு அது செய்கின்றது. உங்கள் மேல் எச்சில் உமிழ்கிறவர்களை நீங்கள் நேசிக்கும்படிக்கு அது செய்கின்றது. நீங்கள் மன நலம் பாதித்தவன் என்று உங்களை நோக்கிக் கூறுகிறவர்களை நேசிக்கும்படிக்குச் செய்யும். 83. இந்த ஆவியை நீங்கள் உங்களுக்குள்ளாக பெற்றுக் கொள்ளும்போது, அப்பொழுது வாழ்க்கையின் பாரங்களெல்லாம் இலகுவாகும். நீங்கள் அவைகளை கவனிக்கக் கூட மாட்டீர்கள். நுகமானது பறவைகளின் சிறகுகளால் மூடப்பட்டிருக்கின்றது. அவைகள் மிகவும் எளிதான ஒன்றாக ஆகிவிடும். மேலும் மக்கள் உங்கள் மீது காரியங்களைக் குவித்தாலும் கூட... அது உங்களுக்குத் தெரியுமா-? நீங்கள் காசாவின் வாசலிலிருந்த சிம்சோனைப் போல இருப்பீர்கள். அவன் அந்த பெரிய வெண்கல வாசல் கதவுகளை தூக்கிக் கொண்டு போய் மலையின் உச்சியில் போட்டான். 84. ஆகவே பரிசுத்த ஆவி உங்களைக் கொண்டிருக்கின்ற ஒருநிலையை நீங்கள் அடைவீர்களானால், நீங்கள் பரிசுத்த ஆவி கொண்டிருப்பது அல்ல, ஆனால் பரிசுத்த ஆவி உங்களை வைத்திருக்கும் நிலைக்கு... நீங்கள், “நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன்” என்று கூறலாம். ஆனால் அவ்விதமாக அது கூறப்படக்கூடாது என்று நான் நினைக்கின்றேன். நீங்கள், ''பரிசுத்த ஆவியானவர் என்னை வைத்திருக்கின்றார்” என்று கூறவேண்டும். ஆகவே பரிசுத்த ஆவி உங்களை எடுத்துக் கொள்ளும்போது, பாரங்கள், நுகம் இலகுவானதாக இருக்கும். அப்பொழுது நீங்கள் காசாவின் பெரிய வாசல் கதவுகளை எடுத்து அவைகளைத் தூக்கிக் கொண்டு நேராக கல்வாரிக்கு கொண்டு செல்வீர்கள். அங்கே கல்வாரி மலையில் இயேசுவின் பாதத்தில் அவைகளை வைத்து, எந்த ஒரு கசப்புமின்றி உங்கள் சத்துருக்களுக்காக ஜெபிப்பீர்கள், "கர்த்தாவே நீர் அவனை பிளந்து திறந்து போடும்” என்றல்ல. இல்லை, ஆனால் உங்கள் இருதயத்தில் ஒன்றைக் கொண்டிருந்து, “அருமை தேவனே, அந்த மனிதன் என்னைப்போலவே ஒரு மனிதனாக இருக்கின்றான்” என்பீர்கள். நண்பனே, சபையில் என்ன குறைவுபட்டு இருக்கின்றது என்பது உன்னால் காணமுடிகின்றதா-? இப்பொழுது, நமக்கு தேவைப்படுவது என்னவென்றால்; நாம் மறுபடியுமாக எல்லாவற்றையும் திரும்பவும் ஆரம்பிக்க வேண்டும். 85. இப்பொழுது, முடிப்பதற்கு முன்னர் தயவுகூர்ந்து நான் சில காரியங்களைக் கூறுகிறேன். நீங்கள் அருமையானவர்கள். நான் இதை உங்களிடமாக என் இருதயத்திலிருந்து இப்பொழுது பேச விரும்புகிறேன். நாம் முடிக்கும் முன்னர் இக்காலை மனதளவில் ஒரு சிறு பிரயாணத்தை நாம் செய்வோமாக. நாம் திரும்பி உலகத் தோற்றத்திற்கு முன் இருந்ததற்குச் செல்வோமாக. 86. இந்த சிறிய மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கும் மலர் செண்டில் உள்ள அந்த லீலி பூக்களை நான் பார்க்கின்றேன். அந்த மனிதன் ஆசீர்வதிக்கப்படுவாராக. இந்த சபைக்கு மலர் செண்டுகளை தயாரிக்கும் ஒருவர் இருக்கின்றார் என்று நான் நம்புகிறேன். அவர் எப்பொழுதுமே காரியங்களைச் செய்வதில் மிகவும் தாராளமானவர். ஒருக்கால் அவர் அதை கொடுத்திருக்கலாம். இவைகள் கூட தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதைப் பாருங்கள். ஆனால் இந்த லீலியை உண்டாக்கினவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்களா-? அது எங்கிருந்து வந்துள்ளது என்பது தெரியுமா-? 87. உலகம் ஆரம்பித்ததற்கு முன்னர் இருந்ததை நாம் சற்று பார்ப்போம். இப்பொழுது, இந்த லீலி செடியானது பூமியிலிருந்து வந்தது, அவ்வாறே நீங்களும் கூடத்தான் வந்துள்ளீர்கள். அது அவ்விதமாகத்தான் என்றால், நாமும் கூட இங்கே இருந்தோம்; இங்கே பூமியில் எந்த ஒரு விதமான ஜீவனும் இருப்பதற்கு, முன்னதாகவே நம்முடைய சரீரங்கள் பூமியின் மீது இருந்தன. நாம் பூமியில் 16 வித்தியாசப்பட்ட மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளோம். அது என்ன என்றால், சாம்பல் சத்து, சுண்ணாம்பு சத்து, பாறையெண்ணை (பெட்ரோலியம்), இயலுலக அண்டத்திற்குரிய ஒளி, மற்றும் இன்னும் பிறவற்றுடன் சேர்த்து அணுக்களால் நாம் ஒருங்கிணைக்கப்பட்டு பிணைக்கப்பட்டுள்ளோம்; பூமியின் 16 மூலக்கூறுகள். ஆகவே, அது அப்படியாக இருக்குமானால், விஞ்ஞானப்பூர்வமாக அப்படியாக அது உள்ளதால், அப்படியானால் நாம் உண்மையாகவே.... பூமியில் எந்தவிதமான ஒரு ஜீவனும் இல்லாது இருப்பதற்கு முன்பே நம்முடைய சரீரங்கள் இங்கே பூமியில் பரந்து விரிந்து கிடந்தன. 88. சிருஷ்டிப்பின் போது சாம்பல் சத்து, சுண்ணாம்பு சத்து, பாறையெண்ணை (பெட்ரோலியம்), இயலுலக அண்டத்திற்குரிய ஒளி இங்கே இருந்தன. எரிமலைப் பிழம்புகள் வெளியே எரியப்பட்ட போது, அவர்கள் நமக்குக் கூறுவது என்னவென்றால், அவை வெடித்து சிதறி பூமியின் மீதுள்ள பொருட்களாக உருவாகின என்பதே, சாத்தான் பூமியின் பயங்கரமாக எரிகின்ற அக்கினி கற்கந்தகத்திலே மேலும் கீழுமாக நடந்துக் கொண்டு இருக்கையில் அவனுடைய கைவசத்தில் இருந்தபடியால் அது எரிகின்ற அக்கினி கந்தகங்களாக மாத்திரமே இருந்தன. ஆகவே தேவன் அவைகளின் சூடு ஆறப்பண்ணி அங்கே தம்முடைய மகத்தான சிந்தையில் அவைகளை வைத்தப்போது, தாம் செய்யப் போகின்ற ஒன்றை தம்முடைய சிந்தையிலே அவர் கொண்டு இருந்தார். 89. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.'' இப்பொழுது, ஒரு வார்த்தையானது சிந்தையில் இருப்பது வெளிப் படையாகக் கூறப்படுவதேயாகும். என்ன செய்ய வேண்டும் என்பதை தேவன் தம்முடைய சிந்தையில் கொண்டிருந்தார். ஆனால் அவர் அதை வெளிப்படுத்தின போது, அது காட்சியில் வந்து தோன்றி இருக்க ஆரம்பித்தது. அது மெய்யானதாக வெளிப்பட்டு காட்சியில் வந்தது ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்துதல் ஆகும். 90. ஆகவே அதில்... நண்பனே, இதை நீங்கள் பதிவு செய்து கொள்ளும்படியாக நான் இதை கூறுவேனாக. தேவனுடைய நோக்கத்தை முறியடிக்க முழு நரகத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலும் கூட போதுமான வல்லமையானது கிடையாது. எப்படியாயினும் தேவன் அதைச் செய்வார். 91. நான் அடிக்கடி குறிப்பிடுவது போல... எப்படியாக சாத்தான் சுகமளிப்பவன் அல்ல என்று கடந்த இரவு நான் என்னை அறியாமலே ஒரு சிறு குறிப்பைக் குறித்துப் பேசினேன். அந்த லூத்தரன் கல்லூரியில் சமீபமாக எல்லோரும் மனந்திரும்பினார்களே அங்கே, நான்... அந்த மனிதன் அக்குறிப்பிட்ட பொருளின் பேரிலே என்னுடனே வாக்குவாதம் செய்தார். சாத்தானால் சுகமளிக்க முடியும் என்று கூறினார். யாராவது ஒருவர் சாத்தானால் சுகமளிக்க முடியும் என்று கூறினால், அவர் தவறாயிருக்கின்றார். 92. தேவனால் மாத்திரமே சிருஷ்டிக்க முடியும். சாத்தானால் சிருஷ்டிக்க முடியாது. சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை அவனால் தாறுமாறாக்க மாத்திரமே முடியும். ஒரே ஒரு சர்வ வியாபி மாத்திரமே உண்டு. சாத்தானால் எங்கும் பிரசன்னமாயிருக்க முடியாது. தேவன் மாத்திரமே எங்கும் பிரசன்னமாயிருக்கின்றார், அவர் சர்வ வல்லமையுள்ளவர், முடிவற்றவர் ஆவார். 93. எந்த ஒரு மருந்தாலும் சுகமளிக்கும்படியாக அணுக்களை உண்டாக்க முடியாது. அந்த பழைய அணுக்களை வெட்டி வெளியே எடுக்கக்கூடிய மருத்துவர்கள் இருக்கின்றனர்; கரங்களை நேராக்கவோ அல்லது கரங்களை சரியாக அமைக்கும்படியாகவும் உள்ளனர், அல்லது பல்லைப் பிடுங்கி வெளியே எடுக்கும் மருத்துவர் உள்ளனர்; சர்வ வல்லமையுள்ள தேவனைத் தவிர வேறே அணுக்களை உண்டாக்க பூமி முழுவதிலும், பாதாளம் முழுவதிலும் எந்த ஒரு நபரும் கிடையாது. வல்லமைகளும் கிடையாது. "உங்கள் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே.'' மிகப்பெரிய அறிவுத்திறம் வாய்ந்தவர்கள் தேவனுடைய வார்த்தையில் இருந்து அகன்று செல்கையில் எப்படியாக அவர்கள் குழந்தைத்தனம் மிக்கவர்களாகவும், சிறு பிள்ளைகளைப் போலவும், கீழ்த் தரமானவர்களாகவும் இருக்கின்றனர். 94. இப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். துவக்கத்திலே நம்முடைய பிதாவாகிய தேவன் இந்த வெறுமையான பூமியை நோக்கிப் பார்த்தபோது, அது முழுவதுமாக ஒரு மிகப் பெரிய தண்ணீர் உருண்டையைப் போல் இருந்ததே தவிர வேறு ஓன்றுமல்ல, அப்பொழுது தேவன் பரிசுத்த ஆவியை பூமிக்கு அனுப்பினார், அந்த லோகோஸ் தேவனிடமிருந்து புறப்பட்டு வெளியே சென்றது, அது பூமியின் மீது முழுவதுமாக மூடி அடைகாப்பது போல அருகணைத்து நிற்க ஆரம்பித்தது. இப்பொழுது, "அடைகாத்தல்” என்கின்ற வார்த்தைக்கு “அன்பு கூறுதல்” என்று பொருள்படும் அல்லது ஒரு புறா கூவும் ஒலி போன்று, ஆகவே அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் பூமியின் மீது... மனதளவில் அதை நாம் பார்க்கும் வேளையில், நாம் அதை சிறகுகள் போல அமைத்துப் பார்ப்போமாக, தம்முடைய மகத்தான சிறகுகளை பூமியின் சுற்றிலுமாக அமைத்து, அடைகாத்து, அன்பு கூர்ந்து, கூவும் ஒலியை எழுப்புகின்றார். “வா, வா, பிதா உன்னை முன்குறித்துள்ளார், வா. பிதாவின் வார்த்தை என்ன கூறியுள்ளதோ அதை நான் செய்யப் போகின்றேன்.” இதை உங்களால் கிரகிக்க முடிகின்றதா-? பிதா உரைத்துள்ளதை வெளியாக்கவே நான் வந்து உள்ளேன்.'' 95. அருகணைத்து அடைகாத்தல்... சிறிது கழித்து அங்கே பூமியில் சிறிது பாறையெண்ணை (பெட்ரோலியம்) வர ஆரம்பித்து பூமியின் குறுக்காக சென்றது, இங்கே இதில் கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் வந்தது, பிறகு பூமியில் ஒரு சிறிய ஈஸ்டர் லீலியானது மேலே வந்தது. அதை மேலெழும்பச் செய்தது என்ன-? பரிசுத்த ஆவியின் அருகணைப்பே. அதன் பிறகு கூடவே பன்னிற மலர் வகையான மலர்களைக் கொண்ட தோட்டச்செடி வகையான டாலியா செடி, அசலியா செடி வகை, மற்றும் இன்னும் பிற செடிகள் மேலெழும்பி வந்தன. அதன் பிறகு தாவர வாழ்க்கை வந்தன, பரிசுத்தாவியானவர் அருகணைத்து அடைக்காத்துக் கொண்டு இருத்தல். அப்பொழுது தாவரங்களுக்குப் பிறகு மரங்கள் வந்தன, பிறகு தாவர இன வகைகள் வந்தன. அதன் பிறகு பூமியின் தூளிலிருந்து பறவைகள் வந்து பறக்க ஆரம்பித்தன. அவைகளை ஒன்று சேர்த்து அருகணைத்துக் கொண்டிருந்த பரிசுத்தாவியானவர் அவைகளை ஆகாயத்தில் அனுப்பினார். அதன் பிறகு மிருகங்கள் வந்தன, பரிசுத்த ஆவி அருகணைத்து அடைகாத்துக் கொண்டிருத்தல். 96. அடுத்ததாக சம்பவித்தது என்ன-? மானிட ஜீவனானது வந்தது, அந்த நாளிலே நம்முடைய சரீரங்கள் எல்லாம் சரியாக இங்கே பூமியில் கிடந்தன, நாம் பூமியிலிருந்து வந்து இருப்போமென்றால், ஆம் அப்படித் தான், நம்முடைய சரீரங்கள் பூமியினால் உண்டாக்கப்பட்டன. நாம் மரித்துப்போன கால்நடைகள், மரித்த ஆடு மற்றும் மீன், மரித்த உருளைக்கிழங்கு, மரித்த கோதுமையின் மரித்த சாரமாக உள்ளோம். நாம் உண்கின்ற உணவானது உடலின் அணுக்களை பெருகச் செய்து நாம் இந்த விதமாக இருக்கும்படிக்குச் செய்கின்றது, நாம் பூமியிலிருந்து வந்துள்ளோம்; அப்படியாகத்தான் நாம் இருக்கின்றோம். 97. ஏதோ ஒன்று மரித்ததினால் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம். இன்று நீங்கள் உயிர் வாழவில்லை என்றால், மரித்த ஒன்றை நீங்கள் உண்ணவில்லையெனில், உங்களால் உயிர் வாழ முடியாது. நம்முடைய இயற்கைப் பிரகாரமான உயிர் வாழ்தல் மரித்த ஒன்றினால் மாத்திரமே சாத்தியமாகும். நாம் மீன் உண்ணுகிறோம்; அந்த மீன் மரித்திருந்தது. மாட்டிறைச்சியை நாம் சாப்பிடும் போது, அந்த மாடு மரித்திருந்தது. நாம் ரொட்டியை சாப்பிடும் போது, கோதுமையானது மரித்திருந்தது. சரீரப்பிரகாரமாக நாம் மறுபடியுமாக உயிர் வாழ வேண்டுமென்றால் ஏதாவதொன்று மரித்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் நாம் பூமியின் சாரமாக இருக்கின்றோம், ஆகவே அந்த விதமாகத்தான் நாம் உயிரோடே இருக்கும்படிக்கும் நாம் சாரத்தை உட்கொள்கிறோம். நாம் மறுபடியுமாக சரீரப்பிரகாரமாக உயிர்வாழ்வதற்கென்று ஒன்று மரிக்க வேண்டியதாக இருக்கிறதென்றால், உங்களுக்குள்ளாக இருக்கும் இந்த அழியாத ஆத்துமாவைக் குறித்து என்ன-? நித்தியமாக ஜீவிப்பதற்கென ஒன்று மரிக்க வேண்டி இருந்தது. மலருக்கு தொடர்ந்து வளருகின்ற ஒரு ஜீவன் உள்ளது, ஏனென்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அது இங்கே இருக்கின்றது. நமக்கோ அழியாத ஒரு ஜீவன் இருக்கின்றது. 98. இப்பொழுது, நாம் தொடர்ந்து செல்கையில் நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானது மனிதனுக்குள்ளாக அருகணைத்து அடைகாத்த பிறகு, மனிதன் வருகின்றான். என்ன ஒரு அழகான காரியமாக அவன் இருந்தான். அதன் பிறகு தேவன் ஸ்திரீயை உண்டாக்கினார். இப்பொழுது, அவள் மூல சிருஷ்டிப்பில் இல்லை; அவள் ஒரு மனிதனின் உபசிருஷ்டி மாத்திரமே. நான் மறுபடியுமாக அதைக்குறித்து ஆரம்பிக்க முயற்சிக்கவில்லை, அவள் ஒரு மனிதனின் உபசிருஷ்டியாய் இருந்தாள். ஆகவே அவள் காட்சியில் வந்த போது... அந்த சிறிய ஏவாள், உலகத்தில் இருந்த எல்லாவற்றைக் காட்டிலும் அவள் அழகான ஒருவளாக இருந்தாள். அவளுடைய நீண்ட தலை மயிர் கீழே தொங்கிக் கொண்டிருப்பதை என்னால் காணமுடிகின்றது. இப்பொழுது சரியாக அதைப் பார்ப்போம். அது இளம் பொன்னிறமான நிறத்தில் இருந்தது. ஆகாயத்தைப் போன்றதான நீல நிறக் கண்களை அவள் கொண்டிருந்தாள், அவளுடைய ஒளிர்வு நட்சத்திரங்களைப் போல் இருந்தது. எப்படிப்பட்ட ஒரு இருதயத்திற்கு இனிமையானவளை ஆதாம் கொண்டிருந்தான் பாருங்கள், அவலட்சணமாக அல்ல, அது காட்சியிலேயே கிடையாது. அவள் ஆதாமோடு நடந்தாள், தண்ணீர் இருந்த இடத்தண்டை வந்த போது அவள், "ஓ, ஆதாம் அந்த காற்று” என்பாள். 99. ஆதாம் “அமைதியாயிரு” என்பான். காற்று பலமாக வீசுவது நின்றது, பிறகு அவள் சென்று ...அப்பொழுது அந்த பெரிய சிங்கமானது கர்ஜிக்க ஆரம்பித்தது. ஏவாளால் பயப்பட முடியவில்லை, ஏனென்றால் அவள் பயங்கொள்ளும்படிக்குச் செய்ய எதுவுமே அங்கே இல்லாது இருந்தது. அவள், "அன்பே, அது என்ன சத்தம்-?” என்பாள். அப்பொழுது ஆதாம் அந்த சிங்கத்தை நோக்கி “இங்கே வா” என்று அழைத்தான். அவன் அதன் தலையின் மேல் தட்டிக் கொடுத்தான். அந்த சிங்கம் பூனையைப் போல மியாவ் என்றது, நீங்கள் வீட்டிலிருந்து புறப்படும் போது உங்களைப் பின் தொடரும் சிறிய நாய் போன்ற அந்த சிங்கம் அவன் பின்பாக நடந்து வந்தது. அதன் பிறகு அங்கே சிறுத்தைப்புலி வகையைச் சேர்ந்த ஒன்று வருகின்றது. அப்பொழுது ஆதாம் அந்த சிறுத்தைப்புலியுடன் பேசினான், அப்பொழுது - அப்பொழுது அவன் அதனுடன் பேச ஆரம்பித்தான். அந்த சிறுத்தைப்புலியானது அவனைப் பின் தொடர்ந்து வந்தது. 100. ஆனால் உங்களுக்குத் தெரியுமா, சாயங்கால நேரமாகத் துவங்கியது, சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவன், “இருதயத்திற்கு இனியவளே, நாம் அங்கே மேலே இருக்கின்ற அந்த பெரிய சபைக்கு, கத்தீட்ரலுக்கு செல்வோம்; நாம் ஆராதனை செய்ய வேண்டும்” என்று கூறினான். அது ஒரு ஸ்தாபனமாயிருக்கவில்லை; அது ஒரு மிகப்பெரிய காட்டுக்குள் இருந்தது. ஆகவே சூரியன் மறைந்து கொண்டிருந்த வேளையில் அவர்கள் அங்கே மேலே சென்று முழங்காற்படியிட்டனர். அப்பொழுது பிதாவானவர் கீழே வந்தார். மின்னல்கள் பிரகாசமாய் மின்னியது, இடிகள் முழங்கின, அப்பொழுது ஒரு அழகான கம்பீரமான ஒளியானது அடர்ந்த மரங்களின் மேலாக மிதந்து வந்தது, அங்கே கீழே வந்திறங்கியது. பிதாவின் அன்பு நிறைந்த சத்தமானது, “பிள்ளைகளே, இன்றைக்கு நீங்கள் மகிழ்வாக உணர்ந்து சந்தோஷமாக இருந்தீர்களா-? உங்களுக்கு குட் நைட் சொல்லி முத்தமிட்டு இன்றிரவு உங்களை தூங்க வைக்க அப்பா கீழே இறங்கி வந்திருக்கின்றேன்” என்று கேட்பதை என்னால் கேட்க முடிகின்றது. அப்பொழுது ஆதாமின் கன்னத்தில் ஒரு முத்தம், ஏவாளின் கன்னத்தில் ஒரு முத்தம்... பிறகு அவன் தன்னுடைய பெரிய கரத்தை நீட்டுகின்றான், அவள் தன்னுடைய தலையை, அந்த சிறிய நேர்த்தியான தலையை அவனுடைய கரத்தின் மேல் ஒரு தலையணையின் மேல் தலை வைப்பது போல வைத்துக் கொள்கின்றாள், அப்பொழுது அவர்கள் உறங்கினர், எல்லாம் பரிபூரணமாக இருந்தது, எதுவுமே அவர்களுக்குத் தொல்லை கொடுக்காது. பிதாவானவர் அவர்களை கவனித்துக் கொண்டிருக்கின்றார். அவர்களுக்கு தீங்கிழைக்க பூமியில் எதுவுமே இல்லாதிருந்தது. லீயோ சிங்கம் அங்கே படுத்துக் கிடந்தது; சிறுத்தை அங்கே படுத்திருந்தது. பிதா அவைகளையெல்லாம் படுக்க வைத்திருந்தார். அது அருமையான ஒன்றல்லவா. 101. அப்பொழுது பாவமானது உள்ளே வந்தது. அது முழு காட்சியையுமே பாழாக்கிப்போட்டது. ஆம். ஆனால் நாமோ இங்கே இருக்கின்றோம். தேவனுடைய நோக்கமானது செய்யப்படத் தான் வேண்டும். 102. இப்பொழுது, அவளும் மனிதனும் இருவருக்குமான இணைப்பினாலே ஸ்திரீயானவள் இந்த ஜீவ அணுவைக் கொண்டு வரவேண்டியவளாக இருந்தாள். நாம் அதின் காரியத்திற்குள்ளாகச் செல்ல வேண்டாம், ஏனென்றால் நீங்கள் நிச்சயமாக என்னுடன் உடன்பட மறுப்பீர்கள். ஆனால், ஏதேன் தோட்டத்தில் அவர்கள் சாப்பிட்டது ஆப்பிள் பழங்கள் அல்ல. ஆகவே அப்படியானால், அவர்கள் அதைச் செய்தபோது, அது என்னவாயிருந்தாலும் சரி, ஸ்திரீ பாவம் செய்தாள், மனிதன் பாவம் செய்யவில்லை..... இல்லை, மனிதன் பாவம் செய்தான் என்று நான் கருதுகிறேன். ஸ்திரீ பாவம் செய்யவில்லை. (I mean man sinned, woman never sinned) உண்மையில் ஸ்திரீயானவள் வஞ்சிக்கப்பட்டாள். ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை; தான் செய்வது என்ன என்று அவன் அறிந்திருந்தான். ஏவாளோ தான் சரியாக உள்ளதாக நினைத்தாள். சாத்தான் அவளுக்கு அளித்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு புதிய வெளிச்சத்தை அவள் பெற்றுக் கொண்டிருந்தாள். அவள் இன்னுமாக அவளுக்கு புதிய வெளிச்சத்தை அளித்துக் கொண்டு இருக்கின்றான். வேதாகமத்துடனே தரித்து நில்லுங்கள். அதுவே தான். 103. ஆனால் சாத்தானோ அவளிடமாகக் கூறினான். அப்பொழுது அவள், “சற்று பொறு, தேவன் கூறியிருக்கின்றாரே...'' என்றாள். 104. அதற்கு அவன், “நிச்சயமாக...” என்றான். ஆகவே அப்பொழுது, அது என்னவாயிருந்தாலும் சரி, அந்த செயலானது செய்யப்பட்டது. அதன் பிறகு, அவள் தன் கணவனை கவர்ச்சியூட்டி இழுத்தாள், அவனும் அது தவறு என்பதை அறிந்திருந்தான். ஆகவே அவன் தன்னுடைய மனைவியின் மீதிருந்த அன்பினாலே, ஆதாம் ஏதேன் தோட்டத்திலிருந்து நடந்து வெளியே சென்றான்; அது கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருந்தது, பாவமறியாத அவர் கீழே வந்தார், தம்முடைய சபைக்காக அவர் பாவமாக்கப்பட்டார், ஆதாம் தான் செய்து கொண்டு இருப்பது என்ன என்பதை அறிந்தவனாக நேராக வெளியே சென்றான். "அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.'' தான் செய்வது என்ன என்று அறிந்தவனாக அவன் வெளியே சென்றான். அவர் நம்மை மறுபடியுமாக மீட்கும்படியாக நம்முடைய மீறுதல்களில் பங்குள்ளவனாக இருந்தான். என்ன ஒரு அழகான காட்சியாக அது இருந்தது. 105. கவனியுங்கள். அப்படியானால் நண்பனே, பரிசுத்தாவியானவர் நம்மை கவர்ந்திழுக்கவும் அல்லது பூமியின் மீது அடைகாத்து, அருகணைத்து, நம்மை திரும்பவுமாக அழைப்பதற்கும், நம்மை ஒன்று கூட்டி அழைப்பதற்கென என்றிருக்குமானால், நம்முடைய சிருஷ்டிப்பில் நம்முடைய பங்கு என்பது எதுவுமே இல்லாதிருக்கையில்... இப்பொழுது நாம் உண்டாக்கப் பட்டிருக்கும் விதமாவது நாம் இப்படியாக இருக்க வேண்டும் என்கின்ற நம்முடைய விருப்பத்தின்படியாக அல்ல; நாம் இங்கே இருப்போம் என்று தேவன் தம்முடைய முன்னறிதலினாலே அறிந்திருந்தார், மேலும் அவர் நம்மை உண்டாக்கியிருக்கும் விதமாவது நம்முடைய உண்டாக்கப்படுதலிலே நம் பங்கு நமக்கு எதுவுமேயில்லை, அப்படியாக காரியமானது இருக்கையில், இன்னுமாக அவர் நம்மை எப்படியாக எழுப்பப்போகின்றார்-? நம்முடைய சரீரத்தின் சாம்பல் சத்து, சுண்ணாம்பு சத்து, பாறையெண்ணை (பெட்ரோலியம்) மற்றும் ஈரப்பதங்கள் இன்னும் பிறவற்றன காற்றின் நான்கு திசைகளிலும் ஆங்காங்கே சிதறியிருந்தாலும், முதலாவதாக நம்மை அடைகாத்து அருகணைத்து காட்சியிலே தோன்றும்படிக்குச் செய்த அந்த அதே பரிசுத்தாவியானவர் தாமே நம்மை கடைசி நாளிலே மறுபடியுமாக எழுப்ப முடியும். 106. ஆகவே அப்படியானால், நாம் ஒரு வாலிப மனிதனாகவோ அல்லது வாலிபப் பெண்ணாகவோ ஆகும் போது எப்படியாக இருப்போம்-? அவர், “இந்த வழியாக இருக்க நீ விரும்புகின்றாயா-?” என்று கூறினார். 107. "பிதாவே, அது அருமையானது.'' உன்னுடைய சொந்த தெரிந்து கொள்ளுதலை செய்ய உனக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. நீ உன்னுடைய சொந்த தெரிந்து கொள்ளுதலை செய்யலாம். நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீங்கள் நித்திய ஜீவனை வேண்டாமென்று நிராகரிக்கலாம். நீங்கள் உலகத்தின் சாம்பல் சத்தும் சுண்ணாம்புச் சத்துமாவீர்கள். உங்கள் சரீரங்கள் அதினாலே உண்டாக்கப்பட்டுள்ளன. இப்பொழுது நீங்கள் இருக்க விரும்புவது....அவர் உங்களை ஒரு தேவதூதனாக உண்டாக்கவில்லை, நீங்கள் ஒரு போதும் ஒரு தேவ தூதனாக இருக்க மாட்டீர்கள். அவர் உங்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கியுள்ளார். ஆகவே அந்த விதமாகத்தான் நீங்கள் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் ஜீவனை விரும்புவீர்களானால், அப்படியானால் ஜீவனை நாடுங்கள். 108. ஆகவே பரிசுத்த ஆவியானவர் தாமே... இதோ அது, சீக்கிரமாக... பரிசுத்த ஆவி தாமே மானிட இனத்தின் மீது அடைகாத்து அருகணைத்துக் கொண்டிருக்கும் என்றால், அது ஏற்கெனவே பூமியின் தூளைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. பரிசுத்த ஆவியானவர் ஒருவர் மாத்திரமே உங்களுக்குள்ளாக நித்திய ஜீவனை அடைகாத்து அருகணைத்து உட்செலுத்த முடியும். உங்களுடைய அறிவாற்றல் திறம், நீங்கள் எவ்வளவாக அறிவு மிகுந்தவர்களாக இருக்கலாம், அவைகளெல்லாம் தேவனால் முழுவதுமாக வேண்டாமென்று தள்ளப்பட்ட ஒன்றாகும். உங்கள் ஸ்தாபனங்கள் தேவனைப் பொறுத்த வரைக்கும் முக்கியமானவைகளே அல்ல. உங்கள் வேதகலாச் சாலையின் மிகப்பெரிய மகத்தான ஆசான்கள் தேவனுக்கு முக்கியமானவர்கள் அல்ல. உங்களை தேவனுடைய ஐக்கியத்திற்குள்ளாகக் கொண்டு வந்து உங்களுக்கு நித்திய ஜீவனை அளித்து கடைசி நாளிலே உங்களை மறுபடியுமாக உயிரோடு எழுப்ப பரிசுத்த ஆவியின் அடைக்காத்தலினாலே தான் முடியும். "ஒருவன் ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறவாவிட்டால் உள்ளே பிரவேசிக்கமாட்டான்." 109. நண்பர்களே, உங்களால் அதைக் காணமுடிகின்றதா-? நீங்கள் எவ்வளவு சாமர்த்தியசாலிகளாக இருந்தாலும் சரி, உங்கள் சாமர்த்தியத்திற்கும் அதற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அது உங்களுடைய... “நான் சபையைச் சேர்ந்திருக்கின்றேன்," அது உங்களுடைய புதிய ஆவியாக இருக்கலாம், “நான் அந்நிய பாஷையில் பேசினேன்,'' அது உங்களுடைய புதிய ஆவியாக இருக்கலாம். நீங்கள் அந்நிய பாஷையில் பேசினதால் சரியென்று நினைக்காதீர்கள்... பிசாசுகள் அந்நிய பாஷையில் பேசுவதை நான் கண்டு இருக்கிறேன். மந்திரவாதிகள் பேசுவார்கள் மற்றும் ஒவ்வொரு... ஆனாலும் இன்னுமாக பரிசுத்த ஆவி அந்நிய பாஷையில் பேசுகின்றது. 110. ஆகவே அநீதி என்பது என்ன-? அது நீதி தாறுமாறாக்கப்படுதல் ஆகும். நிச்சயமாக, பிசாசு பொய்யான காரியத்தைக் கொண்டிருக்கின்றான். அங்கே தெருவில் இருக்கின்ற அந்த குறி சொல்லுகிறவன் யாராக இருக்கின்றான், அவன் பிசாசு பிடித்த நபரே தான். அது ஒரு தீர்க்கதரிசி தாறுமாறாக்கப்பட்டிருக்கின்ற ஒன்றாகும். அவன் தேவனுடையதை ஒன்றை எடுத்து தான் அதை தாறுமாறாக்க முடியும். ஆனால் நாமோ அந்த காரியங்களுக்கு விரோதமாக போதிக்கப்பட்டுள்ளோம். பிசாசு அவர்கள் மேல் அப்படியே மூடிக் கொள்கின்றான், அவ்வளவு தான். ஆனால் நாம் வேதாகமத்தின் பேரிலே போதிக்கப் படுகையில், அப்பொழுது அந்த பரிசுத்த ஆவி தாமே அதை எடுத்து சபைக்குள்ளாக பொருத்துகின்றது. உங்களால் அதைக் காண முடிகின்றதா-? 111. நீங்கள் நீதியை ஏற்றுக் கொள்ளவில்லையெனில், அப்பொழுது அநீதி உங்களை ஆட்கொள்ள ஆரம்பிக்கும். நீங்கள் கிறிஸ்துவை ஏற்கவில்லையெனில் உலகம் உங்களை எடுத்துக் கொள்ளும். நீங்கள் உள்ளே வரும் போது எந்தவிதமான ஒரு மனிதனாக இருந்தீர்களோ அதே மனிதனாக உங்களால் அந்த கதவிற்கு வெளியே அப்படியே செல்ல முடியாது. உங்களால் முடியாது. பரிசுத்த ஆவி அடைகாத்து அருகணைத்துக் கொண்டு இருக்கின்றது. கவர்ந்திழுக்கின்றது, அழைக்கின்றது, "ஓ, நீங்கள் இங்கே வருவீர்களானால், அந்த கல்லான இருதயத்தை நான் எடுத்துப் போடுவேன். நீங்கள் வருவீர்களானால், உங்களுக்கு உள்ளாக ஒரு புதிய ஆவியை வைப்பேன்; நீங்கள் வருவீர்களானால், இந்த புதிய ஆவிக்குள்ளாக நான் வருவேன்." 112. பிறகு பிசாசு திரும்ப வருகையில் அவன் காண்பது என்ன-? அவன் தன்னுடைய குப்பை தொட்டியைக் காண்கின்றான். தேவன் தம்முடைய பெரிய புல்டோசரை (bulldozer) (நிலத்தை சமன் செய்யும் இயந்திரம்) கீழே அனுப்பி எல்லா காரியங்களையும் தூள்தூளாக வெட்டி எரிந்து, எல்லாவற்றையும் சுத்தம் செய்து குப்பையில் போட்டு விட்டார். அங்கே அல்லேலூயா நிழற்சாலையானது உருவாக்கப்பட்டிருக்கின்றது. முன்னே இருந்த அதே இடமாக அது இப்போது இல்லை. ஒரு அழகான வீடானது அங்கே கட்டப்பட்டுள்ளது. அதிலே... பரிசுத்த ஆவியானவர் அடைகாத்து அருகணைத்திருந்தார். இரட்சிப்பின் பெரிய அழகான பூக்கள் வளர்ந்தெழும்பி நின்று கொண்டிருந்தன. நீங்கள் எதையுமே போலியாக பாவனை செய்து காண்பிக்க வேண்டிய அவசியமே கிடையாது. அது புதிய இருதயமாகும். அது புதியதொரு வாசம் செய்யும் ஸ்தலமாகும். அது ஒரு புதிய ஆவியாகும். எல்லா காரியமும் புதிதான ஒன்றாயிருக்கின்றது. 113. பிசாசு பிறகு உள்ளே நடந்து வந்து நீங்கள் முன்னர் உள்ளே கொண்டிருந்த அந்த பழைய சீட்டாட்ட மேஜை, சுருட்டுகள், அந்த பழைய அமளி, சண்டை, கடுங்கோபம், மற்றும் நீங்கள் கொண்டிருந்த எல்லா காரியமும் இருக்கும் என்று எப்படியாக எதிர்ப்பார்க்கலாம். அவன் திரும்பவுமாக வருகையில் அவன் காண்பது என்னவென்றால் தேவன் தம்முடைய புல்டோசரை எடுத்து எல்லா காரியத்தை இடித்து வெளியே தள்ளி அந்த முழு இடத்தை தலைகீழாக மாற்றிப்போட்டு, ஒரு பெரிய முகப்பு மேடையை உண்டாக்கி ஒரு அழகான வீட்டை அமைத்து, அதில் தாமே உள்ளே சென்று இருக்கின்றார். அல்லேலூயா, ஆமென். 114. ஓ, நான் - நான் பக்தி பரவசமாக உணர்கிறேன், உணர்கிறேன். பரிசுத்த ஆவி அந்த பழைய தோட்டப் பாதையில் உள்ள குப்பைத் தொட்டியை திருப்பி தலை கீழாகக் கொட்டி பிசாசின் காரியங்களை பெருக்கி வெளியே தள்ளுகிறார். ஒரு புதிய இருதயத்தையும் புதிய ஜீவனையும் உண்டாக்குகின்றார். அது மாத்திரம் அல்ல, அவர் உள்ளே வந்து எல்லாம் சரியாக நடக்கின்றதா என்று பார்க்கும்படிக்கு உள்ளேயே இருந்து விடுகின்றார். தேவனுக்கு மகிமை. வேலைகளை கவனித்துக்கொள்ளும் தூதர்களை அவர் கொண்டிருக்கின்றார். அத்தூதர்கள் மரங்களை சரியாக நிலையாக கத்தரிக்கின்றனர். என்னே, என்னே, ஓ, நான் இருக்கும் அளவைக் காட்டிலும் இருமடங்காக இருந்திருந்தால் நலமாயிருக்கும். அவர் செய்வதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள், சகோதர சகோதரிகளே. 115. அறிவாற்றல் திறத்தின் பேரில் அமைந்திருக்கின்ற காரியங்கள் அநேகம் இன்றைக்கு இருக்கின்றன. பெந்தெகொஸ்தே சார்ந்து இருக்கின்ற காரியங்கள் மிக அதிகம் இருக்கின்றன, அதி தீவிர மூட பக்தியின் பேரிலும், மற்றும் உணர்ச்சி வசப்படுதலின் பேரிலும் மிக அதிகம் இருக்கின்றன. இப்பொழுது, பெந்தெகொஸ்தே வானங்கள் உண்மையான காரியத்தால் நிரப்பப்பட்டிருக்கையில் நீங்கள் ஒருபோதும் ஒரு பதிலீட்டை எடுக்க வேண்டாம். ஏதோ ஒரு சிறிய உணர்ச்சி வசப்படுதல், சிறிது கிளர்ந்தெழுதல், உங்கள் கரங்களிலிருந்து சிறிது எண்ணெய் கீழே வழிந்து விழுதல், அல்லது இரத்தம் நிறைந்த முகம் போன்றவைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தேவனுடைய முழு வானமும் உண்மையான அசலான பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களால் நிறைந்திருக்கின்ற வேளையில் இந்த சிறிய உணர்ச்சி வசப்படுதல்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர் உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தை, ஒரு புதிய ஆவியை அளித்து, தம்முடைய ஆவியை உங்களுக்குள்ளாக வைப்பார். 116. நாம் ஜெபிப்போமாக. நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், உங்களுடைய கண்கள் மூடப்பட்டிருக்கையில்... நீங்கள் எந்த திசையில் செல்லத்தக்கதாக இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா-? பூமியில் இருந்து செல்லும் போது எங்கே என்று உங்களுக்குத் தெரியுமா-? எந்த வழியாக நீங்கள் செல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா-? உங்கள் தலை இப்பொழுது தாழ்த்தப்பட்டிருக்கின்ற இடத்திற்குத்தான், சரியாக திரும்பவுமாக பூமியின் தூளிற்கு, தேவன் இந்த பூமியை சிருஷ்டித்த போது நீங்கள் எந்த மண்ணினால் உண்டாக்கப்பட்டீர்களோ அந்த அதே மண் இங்கே கிடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா-? பூமியோடு கூட உங்களையும் அவர் சிருஷ்டித்தார். நீங்கள் பூமியின் ஒரு பாகமாக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களுக்குள் இருக்கின்ற காரியமானது ஒரு ஆவியாகும்; அது ஒரு ஜீவனாகும். அது பழையதாகவும், கல்லாகவும் இருக்குமானால், அது சுபாவத்தின்படி ஒரு உலகத்தினுடையதாகும். 117. இப்பொழுது, உங்களுக்கு புதிய இருதயம் வேண்டுமா-? ஒரு புதிய ஆவி உங்களுக்கு வேண்டுமா-? அவருடைய ஆவி தாமே உங்களுக்குள்ளாக இருக்கின்ற உங்களுடைய ஆவிக்குள்ளாக வந்து உங்களை இயக்கவும் உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூற முயற்சிக்கவும், காரியங்களைக் குறித்த உங்கள் சொந்த கருத்துக்களையும் நீங்கள் கொள்ள வேண்டாம்; அவர் என்ன விரும்புகின்றாரோ அதை மாத்திரமே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை அடைகாத்து அருகணைக்கும் படிக்கு அனுமதிக்க நீங்கள் விரும்புகிறீர்களா-? "ஆம், சகோதரன் பிரன்ஹாம்.'' 118, நல்லது, அது சரியாக இப்பொழுதே உங்கள் இருதயத்தண்டையில் அவர் அடைகாத்து அருகணைத்துக் கொண்டிருத்தல் ஆகும். “பிள்ளையே, அது நான், அது நான். ''நான் இங்கே நின்று கொண்டிருக்கின்றேன். நீங்கள் மாண்டு அழிந்து போக எனக்கு விருப்பம் இல்லை. ஓ, நீங்கள் அழிந்து போகக்கூடாது என்று நம்முடைய கர்த்தராகிய இயேசு மரித்தார். உங்களால் எழுந்து கொள்ள முடியாது. உங்களை எழுப்ப ஒன்றுமே உங்களுக்குள்ளாக இல்லை. நீங்கள் வேண்டாமென புறக்கணித்துத் தள்ளிய அந்த பரிசுத்தாவியானவர் தாமே, இந்த கடைசி நாட்களில் அவரால் அருகணைத்து அடைக்காக்க முடியாது. நீங்கள் கோட்டைக் கடந்து விட்டீர்கள். ஓ, சீக்கிரமாக திரும்பி வாருங்கள், நீங்கள் மிகவுமாக அகன்று செல்வதற்கு முன்னே மிகச் சீக்கிரமாக திரும்பி வாருங்கள். 119. இங்கே உள்ள எத்தனைப் பேர்கள் உங்கள் கரத்தை உயர்த்தி, உங்கள் தலைகளை தாழ்த்தினவர்களாக "சகோ.பிரன்ஹாம், சரியாக இப்பொழுதே என்னுடைய ஆவிக்குள்ளாக நான் தேவனுடைய ஆவியைப் பெற்றுக்கொண்டு அதினாலே நான் ஜெயமுள்ள ஜீவியம் செய்யத்தக்கதாக நீர் தாமே தயவு கூர்ந்து கிறிஸ்துவின் நாமத்தில் எனக்காக ஜெபம் செய்யுங்கள். என் நிலை மேலும் கீழுமாக இருந்து கொண்டிருக்கின்றது. ஒரு கிறிஸ்தவனாக இருக்க முயற்சிக்கையில் மிகவும் கடினமான ஒரு தருணத்தை உடையவனாக இருக்கின்றேன். ஆகவே, சரியாக இப்பொழுது நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,'' என்று கூறுங்கள். உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெண்ணே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களையும் கூட சகோதரனே. வேறு யாராவது இருக்கின்றீர்களா-? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெண்ணே, உங்களையும் கூட. நான்... தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கின்றார். உங்கள் கரத்தை உயர்த்துங்கள். பூமியானது உண்டாக்கப்படுவதற்கு முன்னமே இந்த பூமியிலே உள்ள ஒவ்வொரு ஈக்களையும், ஒவ்வொரு சிறு உண்ணியையும் அறிந்திருந்த முடிவில்லாத தேவன் உங்களையும் அறிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா-? ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா-? ஆயினும் உங்கள் பிதாவின்... அவைகளில் ஒன்றாகிலும் விழாது..... அந்த அடைக்கலான் குருவியைக் காட்டிலும் நீங்கள் எவ்வளவாக மதிப்புமிக்கவர்களாக உள்ளீர்கள்-? 120. நீங்கள் தேவனிடமாக, “தேவனே, இதோ என் கரத்தை உயர்த்தியுள்ளேன். நீர் தாமே என்னுடைய இருதயத்திற்குள்ளாக வரும்படியாக நான் உண்மையாக அழைக்கின்றேன். நான் அநேக வருடங்களாக சபையைச் சார்ந்தவனாக இருக்கின்றேன். ஏதோ ஒன்று எனக்கு சம்பவித்துள்ளது என்று நான் நம்புகிறேன், ஆனால் அந்த பிரசங்கி பேசிக்கொண்டிருக்கின்ற அந்த விதமான ஒரு வாழ்க்கை என்னால் வாழ முடியவில்லை. நான் மேலும் கீழுமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். நான் மேலே மற்றும் கீழே, உள்ளே மற்றும் வெளியே என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஆகவே என்னால் எவ்வித நிலையையும் அடைய முடியவில்லை. தேவனே, ஒருக்கால் நான் இப்பொழுது தான் புதிய ஆவியைப் பெற்றிருக்கலாம். உம்முடைய வார்த்தை அவ்விதமாகக் கூறுகின்றது. நீர் அவர்களுக்கு ஒரு புதிய ஆவியைக் கட்டளையிடுவீர் என்று உம்முடைய தீர்க்கதரிசி கூறியிருக்கின்றார். ஆகவே அப்படியானால் அந்த புதிய ஆவியில் உம்முடைய ஆவியை வைத்தருளும்; ஒருக்கால் நான் இப்பொழுது தான் அந்த புதிய ஆவியைப் பெற்றிருக்கலாம். என்னுடைய வாழ்க்கையானது... ஓ, எனக்கு மிகவும் பயங்கரமான கோப சுபாவம் இருக்கின்றது. இந்த எல்லா காரியத்தையும் நான் கொண்டிருக்கின்றேன், ஆகவே நான் - நான் - நான் அப்படியாக இருக்கக்கூடாது....” என்று மாத்திரம் கூறுங்கள். நிச்சயமாக, உங்களுடைய புதிய ஆவியானது உங்களை அந்த வழியாகப் போகும்படிக்குச் செய்யும். 121. ஆனால், சகோதரனே, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால். 122. “ஓ, ஆனால் சகோ.பிரன்ஹாம், நான் அந்நிய பாஷையில் பேசினேன். நான் சத்தமிட்டேன்; நான்.. நான் - நான் அந்நிய பாஷையில் பேசினேன்; நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான்...'' 123. நீங்கள் என்ன செய்திருந்தாலும் அது எந்த ஒரு வித்தியாசத்தையுமே உண்டாக்காது. ''அந்நாளில் அநேகர் என்னிடமாக வந்து கர்த்தாவே-! கர்த்தாவே-! நான் இந்த காரியத்தை செய்தேன் அல்லவா, அந்த காரியத்தை செய்தேன் அல்லவா-?" 124. ஆனால் சரியாக உங்கள் இருதயத்தின் ஆழங்களில், உலகத்தின் எல்லா காரியமும் மரித்து கிறிஸ்து கட்டுக்குள் எடுத்துக்கொண்டாரா, அப்படியானால் இப்பொழுது, ஏதோ ஒரு காரியமானது உங்களை ஒவ்வொரு நாளும் அன்பிலே உங்களை அசைத்து நடத்துகின்றது. காரியங்கள் எப்படியாக வந்தாலும் சரி, நீங்கள் இன்னுமாக அன்பிலே இருக்கின்றீர்கள். வானம் எப்பொழுதுமே உங்களுக்கு நீல நிறமாக இருக்கும். என்ன சம்பவித்தாலும் சரி, தேவன் சிங்காசனத்தில் இருக்கின்றார்; அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றார், உங்களுக்கு எல்லா காரியத்தையும் நடப்பித்துக் கொண்டிருக்கின்றார். உங்கள் அக்கம்பக்கத்தினர் உங்களைக் குறித்து பேசலாம், யாராவது ஒருவர் உங்களை பரியாசம் செய்யலாம், சபை உங்களிடமாக நீங்கள் அதைச் செய்ய வேண்டும் அல்லது இதைச்செய்ய வேண்டும் என்று கூறி, அதை நீங்கள் செய்ய உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கும். அப்படியானால் நீங்கள் ஒரு சிறு புன்னகையோடு அந்த சிலுவையை எடுத்து நேராக கல்வாரியை நோக்கி நடக்கலாமல்லவா-? அல்லது நீங்கள் சற்று நின்று சலிப்புடனே, “இனிமேல் நான் திரும்பவுமாக போகமாட்டேன், அந்த பழமை மக்கள் கூட்டத்தினிடம் இருந்து பாடுபட்டாயிற்று” என்பாயா. அது தான் உங்களுக்குள் இருக்கும் ஆவியா-? அது பரிசுத்த ஆவியே அல்ல. 125. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி, "தேவனே, எனக்குள்ளாக இருக்கும் ஆவியாகிய என்னுடைய புதிய ஆவிக்குள்ளாக உம்முடைய பரிசுத்த ஆவியை அளியும். நான் ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையை வாழும்படிக்குச் செய்யும்” என்று கூறுவீர்களா, ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெண்ணே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அங்கே இருக்கின்ற பெண் உங்களையும் கூட உங்களைக் கூட, அங்கே பின்னால் இருக்கின்ற உங்களையும் கூட, அங்கே மேலே பால்கனியில் இருக்கின்ற அந்த சிறு பெண், சரி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களையும் உங்களையும்... சரி. 126. இப்பொழுது நாம் நமது தலைகளை அமைதியாக தாழ்த்துவோமாக. அன்பான பரலோகப் பிதாவே, வெளியே பனிப்புயல் கடுமையாக வீசிக்கொண்டிருக்கின்றது; தெருக்களெல்லாம் மழமழப்பாக வழுக்கும் நிலையில் இருக்கின்றது. நான் தொலைப் பேசியில் சகோதரன ஜோசப்பிடமாக, “நான் அங்கே இருப்பேன்” என்று ஏன் கூறினேன் என்று எனக்குத் தெரியாது. சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஆகவே, இப்பொழுது, இந்த சிறிய செய்தியானது, சற்று துண்டு துண்டாக இருந்தாலும், அது மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 20 அல்லது 30 மக்கள் தங்கள் கரங்களை உம்மிடமாக உயர்த்தியுள்ளனர். பிதாவாகிய தேவனே, நீர் அறியாமல் அவர்களாலே ஒருக்காலும் அவ்விதமாகச் செய்ய முடியாது. அவர்களுக்கு என்னவெல்லாம் தேவைப் படுகின்றதோ அதை நீர் தாமே இயேசுவின் நாமத்தில் அவர்களுக்கு அளிக்கும்படியாக உம்மிடமாக நான் ஜெபிக்கின்றேன். அவை அவர்களுக்கு அளிக்கப்படுவதாக. 127. ஆகவே, பிதாவாகிய தேவனே, ஒவ்வொரு பாவமும், ஒவ்வொரு அக்கிரமும், ஒவ்வொரு வியாதியும் எல்லாவற்றையும் மக்களிடமிருந்து எடுத்துப்போடும்படியாக நான் என் இருதயத்தின் எல்லா உத்தமத்துடனும் ஜெபிக்கின்றேன். இயேசுவின் நாமத்தில் அவ்விதமாக இருப்பதாக. அவர்கள் தாமே சம்பூரணமாகவும் நன்றியுள்ளவர்களுமாக இருக்க ஆசீர்வதியும். அதினாலே ஒவ்வொரு இருதயமும் இங்கிருந்து வெளியே செல்லும் போது தங்கள் ஆத்துமாவின் முதன்மை கம்பிச் சுருளோடு கூட(mainspring) பரிசுத்த ஆவியினாலே பாடிக் கொண்டும் மற்றும் அவர்களுடைய இருதயத்தின் துடிப்பானது துடிக்கையில்... ஓ, அவர்களுடைய ஆத்துமாக்கள் தாமே குதித்து, மேலே எழும்பி புதிய திராட்சரசத்துடனே இருக்கும் புதிய துருத்திகளைப் போல விரியட்டும். புதிய விசுவாசத்தினாலும், புதிய ஆவியினாலும் அதின் மையப்பகுதியில் தேவனுடைய ஆவியானது இருந்து ஜீவனானது அவர்களை உந்தித் தள்ளட்டும். பிதாவே, அதை அருளும். 128. சகோதரன் ஜோசப்பை ஆசீர்வதியும்; தீர்மானத்தின் மகத்தான மணி நேரத்தில் அவர் இருக்கின்றார். நீர் தாமே அவருடனே இருக்கும்படியாக நான் ஜெபிக்கின்றேன். சகோதரன் டுப்ளெஸிஸ், ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள சகோதரன், மற்றும் எங்களிடையே வந்துள்ள சகோதரர்களுடனும் தேவன் தாமே எங்களுடன் இருப்பீராக. இன்றிரவு அவர்களுடைய ஆராதனையில் நீர் தாமே அவர்களுக்கு உதவி செய்யும். பிதாவே, இன்றிரவு பிரசங்கிக்க நாங்கள் புறப்பட்டுச் செல்கின்ற அந்த இடத்தில் பிரசங்கம் செய்ய உதவி செய்யும். நீர் தாமே எங்களுடனே இருந்து நாங்கள் சென்று திரும்புகையில் வழவழப்பான சாலைகளில் நாங்கள் பிரயாணிக்கையில் எங்களுக்கு உதவி செய்தருளும். இந்த காரியங்களில் உம்முடைய பரிசுத்தாவி தாமே எங்களை வழிநடத்தி வழி காட்டட்டும். கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கின்றோம். ஆமென். 129. நான் அவரை நேசிக்கிறேன், ஓ, நான் அவரை நேசிக்கின்றேன். நான் அவரைக் காண விரும்புகிறேன். அந்த அருமையான நபராகிய கர்த்தராகிய இயேசுவைக் காண வேண்டும் என்பதே என் இருதயத்தின் அதிக ஆழமான வாஞ்சையாகும். தேவனுடைய சபையே இக்காலை அது தான் உன்னுடைய வாஞ்சையா-? அது தான் உங்களுடைய வாஞ்சையா-? அவர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை உங்கள் மீது வழங்கி உதவுவாராக. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.'' ஆகவே தேவன் எதைக் கொண்டிருந்தாரோ அதை அவர் ஊற்றினார்... தேவனுடைய எல்லாவற்றையும் அவர் கிறிஸ்துவுக்குள்ளாக ஊற்றினார். கிறிஸ்து என்னவாக இருந்தாரோ, அதை அவர் தம்முடைய சபைக்குள்ளாக ஊற்றினார். அந்த மகத்தான ஊற்றுகள் எல்லாவிடங்களிலும் திறந்து இருக்கின்றன, ஆயத்தமாயிருக்கின்றன. அந்த சிறிய ஸ்தாபன கொள்கைகளையும் மற்றும் காரியத்தையும் வெளியே தள்ளியெறிந்து உங்கள் இருதயத்தைத் திறந்து "கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய இருதயத்துக்குள்ளாக வந்து வாசம் செய்யும்” என்று கூறுங்கள். 130. நண்பர்களே, எனக்காக ஜெபம் செய்யுங்கள். நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் அருமையான மக்களாவீர்கள் நான் உங்களை நேசிக்கின்றேன். இன்றிரவு உங்களுடனே தங்கியிருந்தால் நலமாக இருக்கும். ஆனால் நான் தொடர்ந்து செல்ல வேண்டியவனாக இருக்கின்றேன். உங்களை மறுபடியுமாக சந்திக்கும் முன்னர், கர்த்தருக்கு சித்தமானால் நான் தேசங்கள் பலவற்றிற்கு சென்று கொண்டிருப்பேன். ஆகவே தேவன் உங்களை சம்பூரணமாக ஆசீர்வதிக்கும்படிக்கு நான் ஜெபிக்கின்றேன். நான் உங்களை நேசிக்கின்றேன். நீங்கள் எனக்காக ஜெபத்தில் இருக்கும்படிக்கு நான் விரும்புகின்றேன். நான் உங்களை மறுபடியுமாக சந்திக்கும் வரை தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் ஜோசப்..... *******